25 எம்எல்ஏக்கள்ட பேசியாச்சு! ஓபிஎஸ் ஆதரவாளர் போட்ட குண்டு! உற்சாக ஓபிஎஸ்! படபடப்பில்லாமல் இபிஎஸ்!
சென்னை : அதிமுகவில் தங்கள் தரப்புக்கு வர 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக இருக்கிறார்கள் என அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ கூறியிருக்கும் நிலையில், அதெற்கெல்லாம் வாய்ப்பேயில்லை என பதற்றமில்லாமல் இருக்கிறதாம் எடப்பாடி தரப்பு..
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமான நிகழ்வுகள் அடுத்தடுத்து நடைபெற்று வரும் நிலையில் ஆடி மாதம் நிறைவடைந்ததும் சசிகலாவை ஓ பன்னீர்செல்வம் சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகி இருந்தது. அதைப்போலவே தற்போது ஏற்பாடுகளும் நடக்கிறது.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்திற்கு இடையே ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இணைந்து செயல்படுவார்களா என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி நிற்கிறது. அதுவும் விரைவில் நடக்கும் என்கின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

அணிகளை இணைப்பு
இதுகுறித்தே ஓபிஎஸ்ஸே வெளிப்படையாக பேசிவிட்ட நிலையில், டிடிவி தினகரனும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், சந்திப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் சசிகலா அனைவரையும் ஒன்றிணைப்பேன் எனக் கூறி வந்தாலும், இதுவரை ஓபிஎஸ்ஸின் சந்திப்பு குறித்த எவ்வித தகவல்களையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி
இந்நிலையில் தான் அதிமுகவில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் பதவியை எப்படியாவது பறித்து விடும் என்ற நோக்கத்தில் தங்கள் தரப்புக்கு இழுக்க அவர் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கு பலனாக உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ஓபிஎஸ் தரப்பில் தரப்பில் இணைந்தார்.

எம்எல்ஏக்கள்
அதே நேரத்தில் முழுமையாக ஓபிஎஸ் தரப்பில் இருந்து எம்எல்ஏக்கள் வருவார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏனென்றால் கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் சுமார் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் அவர்கள் அனைவருமே எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர்களாக இருக்கின்றனர். இதனால் ஓபிஎஸ் தரப்பில் இணைவார்களா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் தான் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளரான கோவை செல்வராஜ் திடீரென ஒரு குண்டை தூக்கி போட்டார்.

வாய்ப்பில்லை ராஜா
அதில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் 25 எம்எல்ஏக்கள் தங்களுடன் தொடர்பில் உள்ளனர் எனவும் விரைவில் அவர்கள் தங்களை சந்திப்பார்கள் எனக் கூறியிருந்தார். மேலும் கோவையில் நடக்கும் பிரம்மாண்ட மாநாட்டில் யார் யாரெல்லாம் எங்களுடன் வருவார்கள் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் எனக் கூறியிருந்தார். ஒருவகையில் இதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பாதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வந்தாலும், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்களை ஒருவர் கூட தங்கள் பக்கம் இழுக்க முடியாது என்கின்றனர் எடப்பாடி ஆதரவாளர்கள், என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications