எல்லா பக்கமும் அடி! எடப்பாடிக்கு எதிராக களமிறங்கிய திமுக அமைச்சர்!இது என்ன புது ஐடியாவால்ல இருக்கு!
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஒருபுறம் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கி இருக்கும் நிலையில் கூட்டணி தலைமை தொடர்பான விவகாரத்தில் பாஜக நெருக்கடியும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தனது ஆதரவாளர்களை திமுக பக்கம் இழுப்பதற்கு அக்கட்சி தலைமை மூத்த அமைச்சர்களை களமிறக்கி இருப்பது எடப்பாடி பழனிச்சாமியை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஓபிஎஸ் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கட்சியில் ஒற்றை தலைமை தான் வேண்டும் என மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி தூக்க தற்போது ஓபிஎஸ்ஸையே கட்சியை விட்டு விரட்டும் அளவுக்கு வந்திருக்கிறது.
ஒருபுறம் நிர்வாகிகள் ஆதரவு தனக்குத்தான் இருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும், தொண்டர்கள் ஆதரவு தனக்கு தான் இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வமும் கூறிவரும் நிலையில் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
திமுக தரப்பிலிருந்து அதிமுக எம்எல்ஏக்களை தங்கள் தரப்புக்கு இழுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் கூட அவர்களுடன் நேரிடையாக பேச்சு வார்த்தை நடத்தி இருப்பதும் ஊடகங்கள் மூலம் வெளியான நிலையில் கடும் அதிருப்தியில் இருக்கிறார் எடப்பாடி. இது மட்டுமல்லாமல் ஓபிஎஸ் தரப்பில் கோவை செல்வராஜ் போல மிக ஆவேசமாக பேசி வந்த ஒருவரும் திமுக தரப்பில் இணைய பேச்சுவார்த்தையை துவக்கி இருப்பதால் ஓபிஎஸ்ஸும் மிக அதிருப்தியில் இருக்கிறார்.

முக்கிய அமைச்சர்
திமுக தலைமையுடன் மிக நெருக்கம் காட்டி வரும் முக்கிய அமைச்சர் ஒருவர் வாயிலாகத்தான் இந்த பேச்சுவார்த்தைகள் அரங்கேறி வருகின்றனர். கட்சிக்கு வந்தால் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும், அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியுடன் வலைவீசத் துவங்கியிருக்கும் அந்த அமைச்சர் இது தொடர்பாக அறிவாலய தரப்பில் சொல்லி ஓகே வாங்கி விட்டார் என்கின்றனர் திமுக உடன்பிறப்புகள்.

திமுக தலைமை
ஏற்கனவே ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவது நீதிமன்றத்தின் மூலம் தொடர்ந்து குடைச்சல் கொடுப்பது என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடிக்கு எதிராக தீவிர அரசியல் செய்து வருகிறார். மற்றொருபுறம் எடப்பாடி பழனிச்சாமியை மிகக் கடுமையாக விமர்சிக்கும் நபர்களில் ஒருவராக டிடிவி தினகரன் சேர்ந்திருக்கிறார். போதாக்குறைக்கு கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த சசிகலாவும் தற்போது தான் அதிமுக பொதுச்செயலாளர் என அறிக்கை மேல் அறிக்கை விட்டு தனது இருப்பை காட்டிக் கொண்டு வருகிறார்.

பாஜக தலைமை
இப்படி எல்லா பக்கமும் அடி வாங்கிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜக தலைமை வேறு நெருக்கடி கொடுக்கிறது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் மூலம் எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது என்கின்றனர் மூத்த அரசியல் நிபுணர்கள். பாஜகவை கழட்டிவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் மாற்று கூட்டணி அமைத்து பெருவெற்றி பெற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி நினைக்கும் நிலையில் பாஜக முட்டுக்கட்டை போட்டு வருவது எடப்பாடி மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தீவிரம்
பாஜகவை விட்டு விலக வேண்டுமென எடப்பாடி நினைத்தாலும் அவரது ஆதரவாளர்கள் விடமாட்டார்கள் காரணம் எடப்பாடியால் தாங்கள்தான் பாதிக்கப்படுவோம் என்பதை நன்கு உணர்ந்துள்ள அவர்கள் மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் நெருக்கடி வரும் என்பதை உணர்ந்து இருக்கின்றனர். இப்படி எல்லா பக்கமும் நெருக்கடிகளை சமாளித்து எப்படியாவது அதிமுக தலைமையை கைப்பற்றி விட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில் திமுக தலைமையின் நடவடிக்கைகள் அவரை மேலும் அதிர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு போய் வைத்திருக்கிறது. பாஜகவை விட்டு விலக வேண்டுமென எடப்பாடி நினைத்தாலும் அவரது ஆதரவாளர்கள் விடமாட்டார்கள் காரணம் எடப்பாடியால் தாங்கள்தான் பாதிக்கப்படுவோம் என்பதை நன்கு உணர்ந்துள்ள அவர்கள் மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் நெருக்கடி வரும் என்பதை உணர்ந்து இருக்கின்றனர். இப்படி எல்லா பக்கமும் நெருக்கடிகளை சமாளித்து எப்படியாவது அதிமுக தலைமையை கைப்பற்றி விட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில் திமுக தலைமையில் நடவடிக்கைகள் அவரை மேலும் அதிர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு போய் வைத்திருக்கிறது.

காலியாகும் கூடாரம்
ஏற்கனவே பல முக்கிய தலைவர்கள் திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தற்போது அடுத்தடுத்து பலர் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவுவது பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால் தேர்தலுக்குள்ளாக அதிமுக கூடாரம் பெருமளவு காலியாகும் என கூறப்படும் நிலையில் ஆதரவாளர்களை தக்க வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி என்கின்றனர் சேலம் ரத்தத்தின் ரத்தங்கள்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications