Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவையே "டம்மி" ஆக்கிய எடப்பாடி? 27 இடங்களிலும் திமுகவுக்கு கோல்டன் சான்ஸ்! அப்பாவுக்கு "அப்பாடா"

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது வெளியே பார்க்கப் பெரிய விஷயமாகத் தெரிந்தாலும், அதன் பின்னணியில் எடப்பாடி பழனிசாமியின் மறைமுக அரசியல் ஒளிந்திருப்பதாக கூறப்படுகிறது.. அதை பற்றின பேச்சுதான் இப்போது எங்கு பார்த்தாலும் ஓடிக் கொண்டிருக்கிறது.. என்ன தெரியுமா?

தங்களது கட்சியின் வளர்ச்சியை நிரூபிக்கவும், இரட்டை இலக்கத் தொகுதிகளில் வெல்லவும் பாஜக தலைமை, அதிமுகவிடம் மிகக் கடுமையாகப் போராடி தங்களுக்கு 27 இடங்களை பெற்றுள்ளது..

Edappadi Palaniswami Strategy

ஆனால், பாஜகவுக்கு செல்வாக்கு இருப்பதாக அவர்கள் கருதும் இடங்களைக் கேட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்போ தங்கள் கட்சிக்குச் சற்றும் பாதிப்பு வராத இடங்களை மட்டும் ஒதுக்கியிருக்கிறதாம்.. இதன் மூலம் பாஜக போராடிப் பெற்ற தொகுதிகள், அவர்களுக்குப் பலத்தைத் தருவதை விட அதிமுகவின் தயவை அதிகம் எதிர்பார்க்கும் சூழலையே உருவாக்கியுள்ளன..

அதாவது பாஜகவுக்கு கொஞ்சமும் செல்வாக்கு இல்லாத இடங்களைத் தேடிப் பிடித்து அவர்களுக்கு ஒதுக்கியதன் மூலம், எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியை நிலைகுலைய செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு பாஜகவுக்கு 27 சீட்

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 3 தொகுதிகளுமே திமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களின் பிடியில் இருப்பவை தானாம்..

கந்தர்வக்கோட்டையில் களம் காணும் இடதுசாரி வேட்பாளரின் எளிய பிம்பத்திற்கு முன்னால், பாஜக வேட்பாளர் ஒரு அந்நியராகவே பார்க்கப்படுகிறாராம்.. புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மைத்துனர் ராமச்சந்திரன் களம் கண்டாலும், விஜயபாஸ்கர் தனது சொந்தத் தொகுதியான விராலிமலையிலேயே முடங்கியிருப்பதால், பாஜகவுக்கு வேலை பார்க்க ஆட்கள் இல்லையாம்.

அதேபோல அறந்தாங்கியில் இஸ்லாமிய மக்கள் அதிகம் என்பதால், அங்கே பாஜக போட்டியிடுவதைக் கண்டு காங்கிரஸ் கட்சி இப்போதே குஷியாகிவிட்டது போலும்..

திமுக சீனியர்கள்

அதேபோல், திமுகவின் சீனியர் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளை பாஜகவுக்கு எடப்பாடி தள்ளிவிட்டது தான் இதில் உச்சகட்ட சுவாரஸ்யம். ஆவடி, திருச்செந்தூர், திருவண்ணாமலை என அமைச்சர்கள் நாசர், அனிதா ராதாகிருஷ்ணன், எ.வ.வேலு ஆகியோர் களம் காணும் இடங்களை பாஜகவுக்கு ஒதுக்கியது, அந்த அமைச்சர்களுக்கு வெற்றியை மிக எளிதாக்கிவிட்டதாக சொல்கிறார்கள்.

நாகர்கோவிலில் சிட்டிங் எம்.எல்.ஏ காந்தி செல்வாக்குடன் தெரிந்தாலும், அவரை எதிர்த்து நிற்கும் தி.மு.க-வின் ஆஸ்டின் கரன்சியைத் தண்ணீராகச் செலவு செய்யத் தயாராக இருப்பதால் காந்திக்கு நெருக்கடி முற்றியிருக்கிறது..

ராதாபுரம் அப்பாவு அப்பாடா

ராதாபுரத்தில் பா.ஜ.க களம் காண்பதால், கிறிஸ்தவ வாக்குகளை ஒருங்கிணைக்கும் வேலையில் அப்பாவு தீவிரம் காட்டி வருகிறார்.. அவருக்கு இந்தப் போட்டி அல்வா சாப்பிடுவது போல அமைந்துவிட்டது..

அதேபோல சாத்தூர் தொகுதியில் நிலவும் சூழல் பாஜகவுக்கு மேலும் பின்னடைவாகியுள்ளது.. அங்கே த.வெ.க மற்றும் சசிகலா தரப்பு வேட்பாளர்கள் முக்குலத்தோர் வாக்குகளைப் பிரிப்பதால், நாயுடு சமூகத்தைச் சேர்ந்த திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் எளிதாக வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்படுகிறது..

ஆக மொத்தத்தில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட இந்த 27 தொகுதிகளும் திமுக கூட்டணிக்குத் தாரைவார்க்கப்பட்டது போலவே உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.. எடப்பாடியின் இந்தத் திட்டம் பாஜகவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தும் வேலையா? அல்லது யதேச்சையான ஒன்றா என்ற சந்தேகமும் எழுகிறது.. அறிவாலயம் இப்போது இந்த 27 தொகுதிகளிலும் தனது வெற்றிக்கொடியை உயர்த்தத் தயாராகிவிட்டது.

பாஜக ஆரம்பிக்கும் வியூகம்

அதற்கு பாஜக, ஒன்றும் சும்மா இருக்க போவதில்லை.. தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பலவீனமானவை என்றாலும் சரி, இதனை சமாளிக்க தேசிய தலைவர்களின் தீவிர பிரச்சாரத்தையும், மத்திய அரசின் திட்டங்களையும் முன்னிறுத்தித் தனித்துவமான வியூகத்தை வகுக்கும் என்றே தெரிகிறது.

குறிப்பாக பூத் கமிட்டிகளை பலப்படுத்தி, அதிமுகவின் வாக்குகள் சிதறாமல் தங்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய டெல்லி மேலிடம் நேரடியாக களமிறங்கலாம்.. அதுவும் , இந்தத் தொகுதிகளில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களைக் கவர சோஷியல் மீடியா வாயிலாக ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் பிரச்சாரத்தையும் முன்னெடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம்.. என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+