சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அழுத்தம் கொடுக்கும் ‘மேலிடம்’! அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ‘சிவப்பு கம்பளம்’ விரிக்கும் ’மாஜிக்கள்’!

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு இனி கட்சியில் இடமில்லை என எடப்பாடி பழனிச்சாமி முற்றாக மறுத்துவிட்ட நிலையில் கடந்த சில நாட்களாகவே முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைக்கலாம் என கூறி வருவது பரபரப்பை கூட்டி இருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல கட்ட குழப்பங்கள் நிலவின. ஒரு வழியாக எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர்செல்வமும் ஒன்றாக இணைந்தனர். கட்சிக்கு ஓபிஎஸ் தலைமை ஆட்சிக்கு எடப்பாடி தலைமை என ஒப்பந்தத்தின்படி நான்கு ஆண்டு அதிமுக ஆட்சி சில சிக்கல்களோடும் அரசியல் பரபரப்புகளோடும் நிறைவடைந்தது.

இதில் பாஜக தலைமையின் தலையீடும் குறிப்பிடத்தக்க அளவு இருந்தது. நான்காண்டு கால ஆட்சியில் முதல்வராக மட்டுமல்லாது கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்குள் தனது செல்வாக்கை பெரிய அளவில் வளர்த்தெடுத்துக் கொண்டார்.

ஓஹ்ஹோ.. எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்க காரணமே வேறயாமே.. இது பாஜகவுக்கு தெரியுமா?.. திணறும் யூகம்ஓஹ்ஹோ.. எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்க காரணமே வேறயாமே.. இது பாஜகவுக்கு தெரியுமா?.. திணறும் யூகம்

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

ஆரம்பத்தில் பலருக்கு எடப்பாடி பழனிச்சாமி உடன் பரீட்சையம் இல்லாத நிலையில் மாவட்ட செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை கட்சியில் தனது தலைமையை நிரூபித்தார். இதனால் அவருக்கான ஆதரவு வட்டம் அதிகரித்தது. அதன் பலனாக சட்டமன்றத் தேர்தலின் போது முதல்வர் வேட்பாளர் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் பதவி அவரை தேடி வந்தது. அதிமுக முக்கிய முகங்களாக அறியப்பட்ட ஜெயக்குமார், சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே பி முனுசாமி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் எடப்பாடியின் பின்னால் அணிவகுத்தனர்.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

நாட்கள் செல்லச் செல்ல அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் காரணமாக ஒரு எதிர்க்கட்சியாக அதிமுகவால் செயல்பட முடியவில்லை ஒற்றைத் தலைமையே தேவை என முனுமுனுப்புகள் எழத் தொடங்கின. மாவட்ட செயலாளர் கூட்டத்தில் இந்த விவகாரம் வெடித்து கிளம்பிய நிலையில் மீண்டும் போர் கொடி தூக்கினார் ஓபிஎஸ். இரட்டை தலைமையே தொடர வேண்டும் என அவர் வலியுறுத்தி நிலையில் ஒன்று இரண்டு மாவட்ட செயலாளர்கள் மட்டும் அவருக்கு ஆதரவு அளித்தனர்.

 மீண்டும் ஐக்கியம்

மீண்டும் ஐக்கியம்

கட்சியில் 95 சதவீத நிர்வாகிகள் எடப்பாடி பின்னால் திரண்ட நிலையில் மீண்டும் ஓரம் கட்டப்பட்டார் அப்போது இருந்து இப்போது வரை எடப்பாடி என் கையே அதிமுகவில் ஓங்கி இருக்கிறது. இதனிடைய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் குறிப்பிட தகுந்த வெற்றி பெற வேண்டுமானால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் மீண்டும் இணைய வேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது. ஆனால் மூவரும் கட்சிக்குள் வந்தால் தனக்கான முக்கியத்துவம் வெகுவாக குறைந்து விடும் என அஞ்சும் பழனிச்சாமி அதனை முற்றாக மறுத்துவிட்டார்.

 பாஜக தலைமை

பாஜக தலைமை

இருந்த போதும் பாஜக தலைமை தொடர்ந்து முயற்சித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின் போது இருவரும் ஒன்றாகவே வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால் பாஜக கூட்டணியில் இருந்து விலகி விடலாமா என எடப்பாடி பழனிச்சாமி ஆலோசித்து வருவதாகவும் யூகங்கள் கிளம்பின. தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை புறக்கணித்து விட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக இருக்கும் நிலையில் பாஜக தலைமையும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.

சிக்னல்கள்

சிக்னல்கள்

இந்த நிலையில் தான் ஓபிஎஸ் அதிமுகவில் இணைவதற்கான சிக்னல்கள் கிடைக்க தொடங்கியிருக்கிறது. கட்சியில் இடமே இல்லை எனக் கூறப்பட்ட ஓபிஎஸ் மனம் திரும்பி வந்தால் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்றுக் கொண்டால் கட்சியில் மீண்டும் இணைத்துக் கொள்வோம் என்கின்றனர் அதிமுக மாஜி அமைச்சர்கள். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான மணிகண்டன் தான் இதுகுறித்து முதன்முறையாக பேசினார். அப்போது அதிமுகவில் இந்த விவகாரம் வெடித்துக் கிளம்பியது. மணிகண்டனை கட்டம் கட்டுவதற்கான முயற்சிகளும் நடைபெற்றது. இதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தான் அப்படி பேசினேன் எனக் கூறினார் மணிகண்டன்.

 மீண்டும் கட்சியில் இடம்

மீண்டும் கட்சியில் இடம்

இதோடு அந்த விவகாரம் முடிந்து போனது அதற்கு அடுத்ததாக பரபரப்பான பேச்சுகளுக்கு சொந்தக்காரரான மதுரையைச் சேர்ந்த செல்லூர் ராஜு அதிமுக இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது நம்பி வந்தால் ஏற்றுக் கொள்வோம். இல்லையென்றால் கழட்டி விடுவோம் என பேசியதோடு கட்சி நன்றாக சென்று கொண்டிருக்கிறது விலகிச் சென்றவர்கள் மனம் திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்வோம் அனைவரையும் அரவணைத்துச் செல்வார் எடப்பாடி பழனிச்சாமி என இரண்டாவது ஆக பேசினார்.

மாஜிக்கள் பேச்சு

மாஜிக்கள் பேச்சு

இந்நிலையில் தான் தனது மகளின் திருமணத்தை ஒட்டி கோவிலுக்கு சென்று இருந்த ஆர்பி உதயகுமாரும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்படும் எனக் கூறியிருக்கிறார். அவரிடம் செய்தியாளர்கள் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் சேர்த்துக் கொள்வீர்களா? என கேட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்றுக் கொள்பவர்கள் யாராக இருந்தாலும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம் எனக் கூறியிருக்கிறார். இதன் மூலம் தனது தலைமையை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொள்ள வேண்டும் அவ்வாறு ஏற்றுக் கொண்டால் துணைச் செயலாளர் அல்லது இணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகள் வழங்கப்படும் எனக் கூறிவரும் எடப்பாடி கட்சியில் இணைத்துக் கொள்ளலாமா என யோசிக்கிறார் எனவும் அதன் வெளிப்பாடாகவே அமைச்சர்கள் அடுத்தடுத்து ஓபிஎஸ்ஐ கட்சியில் சேர்த்துக் கொள்வது குறித்து பேசி வருகின்றனர் என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

English summary
While Edappadi Palanichamy completely denied that O. Panneerselvam has no place in the party regarding the issue of single leadership in AIADMK, for the past few days, some former ministers have been saying that O. Panneerselvam may join the party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X