காலியாக கிடந்த முக்கியமான பீரோ.. ‘கொள்ளையடித்த ஓபிஎஸ்?’ - லிஸ்ட் தயார்.. ஈபிஎஸ்ஸின் அடுத்த மூவ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில் விலை உயர்ந்த பொருட்கள், முக்கிய ஆவணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தரப்பினர் மீது புகார் அளிக்க ஈபிஎஸ் தரப்பு தயாராகி வருகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் மாயமான பொருட்கள் குறித்த பட்டியல் தயாராகி வருகிறது. எடப்பாடி பழனிசாமியிடம் விவரத்தைக் காட்டிய பிறகு போலீசில் புகார் அளிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

10 நாட்களுக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலக சீல் இன்று அகற்றப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிர்வாகிகள் ஒவ்வொரு அறையாகச் சென்று பார்வையிட்டனர்.

அதிமுக அலுவலக மோதல்

அதிமுக அலுவலக மோதல்

கடந்த ஜூலை 11ஆம் தேதி வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்தபோது, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பினர் கடுமையாக மோதிக்கொண்டனர். இந்த வன்முறையைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். அதிமுக தலைமைக் கழகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இன்று சீல் அகற்றம்

இன்று சீல் அகற்றம்

இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் தர வேண்டும். பாதுகாப்பு கருதி ஒரு மாத காலத்துக்கு கட்சி தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்லக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.

ஒவ்வொரு அறையாக

ஒவ்வொரு அறையாக

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு 4 இடங்களில் வைக்கப்பட்டிருந்த சீலை 10 நாட்களுக்குப் பிறகு இன்று அகற்றிய மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன்ராம், அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த மேலாளர் மகாலிங்கத்திடம் வழங்கினார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி, மேலாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் அலுவலகத்திற்குள் சென்று ஒவ்வொரு அறையாகப் பார்வையிட்டனர்.

கடுமையான சேதம்

கடுமையான சேதம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த அனைத்து அறைகளின் கதவுகளும் உடைக்கப்பட்டு இருந்துள்ளன. உள்ளே இருந்த பொருட்கள் மற்றும் மேஜை நாற்காலிகள் உடைக்கப்பட்டு, அலுவலகமே போர்க்களம் போல் சிதறிக் கிடந்ததைப் பார்த்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து சேதமடைந்த பொருட்களின் விவரங்களை அதிமுக தலைமை அலுவக நிர்வாகிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.

கீழ் தளத்தில்

கீழ் தளத்தில்

அதிமுக ஆண்டு மலர் மற்றும் பொன்விழா மலர் போன்ற புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் அலுவலகம் எங்கும் சிதறிக் கிடந்தன. கீழ் தளத்தில் முக்கிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகளின் அலுவலக அறைகளில் இருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. மேலும் நிர்வாகிகள் கூட்டங்கள் நடைபெறும் அறையில் எடப்பாடி பழனிசாமி படம் இருந்த பேனர் கிழிக்கப்பட்டிருந்தது.

முதல் தளத்தில்

முதல் தளத்தில்

முதல் தளத்தில் அதிமுக தலைமை கழகத்தின் முக்கிய அலுவலகம் உள்ளது. முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு ஆவணங்கள் திருடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு கீழே கிடந்தது. அதில் இருந்த ஆவணங்கள் முழுமையாக துடைத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அதிமுக நிர்வாகிகள் பற்றிய தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கணினிகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

சுத்தமாக துடைக்கப்பட்ட பீரோ

சுத்தமாக துடைக்கப்பட்ட பீரோ

இரண்டாவது தளத்தில் நூலகம் உள்ளிட்ட அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. 3-வது தளத்தில் கட்சியின் கணக்கு வழக்குகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக் கதவு உடைக்கப்பட்டும் பீரோவும் உடைக்கப்பட்டு கணக்கு விவரங்களின் முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளன. ஹார்டு டிஸ்க் திருடப்பட்டு, கணினி முழுமையாக உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விலை உயர்ந்த பொருட்கள்

விலை உயர்ந்த பொருட்கள்

மேலும், ஜெயலலிதாவுக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் வழங்கப்பட்ட பரிசு பொருட்கள், அவர் கட்சிக்கு வழங்கிய பரிசு பொருட்களும் வைக்கப்பட்டு இருந்த அறை கடப்பாறையால் உடைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட வெள்ளி வேல், வெள்ளி செங்கோல்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் மாயமாகியுள்ளன.

Recommended Video

    அதிமுக தலைமை அலுவலகத்தை EPS வசம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
    கொள்ளை புகார்

    கொள்ளை புகார்

    அதிமுக தலைமை அலுவலகத்தின் அனைத்து அறைகளையும் பார்வையிட்ட சி.வி.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள், நிலையை எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லி, இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கத் திட்டமிட்டுள்ளனர். புகாரில் தெரிவிப்பதற்காக, காணாமல் போன பொருட்கள், சேதமடைந்த பொருட்கள் உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+