சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

’ஸ்லீப்பர் செல்’ இவரா? இபிஎஸ்க்கு கல்தா கொடுக்கும் உப்பு ஊர்காரர்! ஓபிஎஸ் அணியில் ஐக்கியமாக ஆயத்தம்!

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுகவில் இவ்வளவு நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருந்த முன்னாள் அமைச்சரும் உப்புக்கு பெயர் போன ஊரைக் கொண்ட மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் தற்போது ஓபிஎஸ்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், உயர்நீதிமன்ற மேல் முறையிட்டு தீர்ப்புக்குப் பிறகு அவர் நிரந்தரமாக ஓ பன்னீர்செல்வம் அணியில் ஐக்கியமாக திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

குறிப்பாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்ததற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான நிர்வாகிகள் ஒரு அணியாகவும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான நிர்வாகிகள் தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சிவி சண்முகம், ஜெயக்குமார், கேபி முனுசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

'என் தொகுதி.. நீ எப்படி வரலாம்?’ திமுக - அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்குவாதம்.. மேடையிலேயே பரபரப்பு! 'என் தொகுதி.. நீ எப்படி வரலாம்?’ திமுக - அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்குவாதம்.. மேடையிலேயே பரபரப்பு!

இரு அணிகள்

இரு அணிகள்

மறுபுறம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த வைத்தியலிங்கம் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கோவை செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியின் அவர் தரப்பு நிர்வாகிகளையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு படி மேலே போய் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவரும் தற்போது ஓபிஎஸ் அணியில் இருப்பவருமான பெங்களூரு புகழேந்தி ஜெயக்குமாரை குறி வைத்து பல முனை தாக்குதல் நடத்தி வருகிறார். இப்படி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வரும் நிலையில் இரண்டு அணியில் இருந்தும் முன்னாள் அமைச்சர்கள் போட்டி போட்டு மற்றவர்களை வசை பாடி வருகிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

இன்னலையில் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் கை மெல்ல மெல்ல ஓங்குவதை கவனித்து வரும் சில முன்னாள் அமைச்சர்கள் நடுநிலை என்ற பெயரில் அமைதி காத்து வருகின்றனர். நாம் ஏற்கனவே கூறி இருந்தது போல கரூர், புதுக்கோட்டை, வேலூர், சிவகங்கை, தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் யாரையும் விமர்சிக்காமல் கடந்த சில நாட்களாகவே தீவிர அமைதி காத்து வருகின்றனர். இது ஒருபுறம் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமானதாகவே பார்க்கப்படுகிறது.

இபிஎஸ் சந்தேகம்

இபிஎஸ் சந்தேகம்


அதே நேரத்தில் மற்ற நிர்வாகிகள் எல்லாம் ஆவேசமாக பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு சில நிர்வாகிகள் மட்டும் அமைதியாக இருப்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருவேளை ஓபிஎஸ் தரப்புக்கு அவர்கள் தாவி விடுவார்களோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தான் வங்க கடலோரம் இருக்கும் உப்புக்கு பேர் போன மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஒருவர் தற்போது தென்மேற்கு பருவக்காற்று தேனி பக்கம் வீசுவது போல அவரை எவ்வித குற்றச்சாட்டுகளை கூறாமல் மிகவும் அமைதியாக இருக்கிறார்.

ஸ்லீப்பர் செல்

ஸ்லீப்பர் செல்

செய்தியாளர்கள் கேட்டால் கூட இப்போதைக்கு அது வேண்டாம் கோவில் நிகழ்ச்சியில் கோவிலை பற்றி மட்டுமே பேசுவோம் எனக்கூறி சமாளித்து வருகிறார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் அவர் சுமூகமாக இருப்பதாக உள்ளூர் நிர்வாகிகள் சேலம் தரப்பில் போட்டுக் கொடுக்க அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் அவர் ஓபிஎஸ் அணியின் ஸ்லீப்பர் செல்லாக இருப்பாரோ என்ற சந்தேகம் சேலம் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர் ஓபிஎஸ் தரப்பில் ஐக்கியமாக இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில் சற்று அதிருப்தியில் இருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு. செய்தியாளர்கள் கேட்டால் கூட இப்போதைக்கு அது வேண்டாம் கோவில் நிகழ்ச்சியில் கோவிலை பற்றி மட்டுமே பேசுவோம் எனக்கூறி சமாளித்து வருகிறார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் அவர் சுமூகமாக இருப்பதாக உள்ளூர் நிர்வாகிகள் சேலம் தரப்பில் போட்டுக் கொடுக்க அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் அவர் ஓபிஎஸ் அணையின் ஸ்லீப்பர் செல்லாக இருப்பாரோ என்ற சந்தேகம் சேலம் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர் ஓபிஎஸ் தரப்பில் ஐக்கியமாக இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில் சற்று அதிருப்தியில் இருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு.

English summary
There are reports that a former AIADMK minister and an administrator from the district, which has a town famous for salt, is currently negotiating with the OPS side and that he is planning to unite in the team
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X