அப்பா அம்மா மக்கள் கழகம் உட்பட தமிழ்நாட்டில் 22 அரசியல் கட்சிகள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 2019 முதல் தேர்தலில் போட்டியிடாத 22 அரசியல் கட்சிகளின் பெயர்கள் தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத மொத்தம் 334 அரசியல் கட்சிகளை தனது பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இந்த உத்தரவை எதிர்த்து 30 நாட்களில் மேல்முறையீடு செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Election commission Delists 22 Inactive Political Parties in Tamil Nadu

தேர்தல் ஆணையத்தின் விளக்கப்படி, கடந்த சில ஆண்டுகளாக தேர்தல்களில் பங்கேற்காத, ஆண்டு கணக்குகள் சமர்ப்பிக்காத, தலைமையகம் மற்றும் பொறுப்பாளர்கள் தொடர்பான தகவல்கள் புதுப்பிக்காத கட்சிகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை கூட 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக நிறைவேற்றாத பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த அரசியல் கட்சிகளின் அலுவலகங்களும்கூட எங்கேயும் செயல்படவில்லை என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இந்த அரசியல் கட்சிகள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவை எனக் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 22 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காமராஜர் மக்கள் கட்சி, அப்பா அம்மா மக்கள் கழகம், மீனவர் மக்கள் முன்னணி, பசும்பொன் மக்கள் கழகம், மக்கள் நீதி கட்சி உள்ளிட்ட 22 கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,854 ஆக இருந்த நிலையில், அவற்றில் தற்போது 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டதால், இந்த எண்ணிக்கை 2,520 ஆக குறைந்துள்ளது. பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற 6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தற்போது நாட்டில் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+