18+1.. அதிமுகவுடன் டீலை முடித்த அன்புமணி! எடப்பாடியிடம் லிஸ்டைக் கொடுத்த பாமக! எந்தெந்த தொகுதிகள்?
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்து இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். 18 சட்டமன்ற தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட்டு தர அதிமுக ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் 25 சட்டமன்ற தொகுதிகளின் பட்டியலை பாமக வழங்கியதாகவும், அதில் 18 தொகுதிகள் அன்புமணி ராமதாஸுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அன்புமணி கொடுத்த உத்தேச பட்டியல் குறித்த சில தகவல்கள் கிடைத்துள்ளது.
தமிழக அரசியல் களம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதிமுக பாஜக கூட்டணியில் அடுத்த பெரிய கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்து 23 தொகுதிகளில் போட்டியிட்டது.
அதில் நான்கு தொகுதிகளில் வெற்றியும் பெற்றது. இந்த நிலையில் தந்தை ராமதாஸ் மகன் அன்புமணி இடையே மோதல் வெடித்த நிலையில் தான் உண்மையான பாமக என அன்புமணி ராமதாஸ் கூறினார். ஆனால் நிறுவன தனக்கே முழு அதிகாரம் இருக்கிறது என ராமதாஸ் கூறி வந்தார்.

அதிமுக - பாமக கூட்டணி
இதற்கிடையே பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு அன்புமணி ராமதாஸ், அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்திருக்கிறார். இதற்கிடையே தேர்தல் ஆணையம், நீதிமன்ற உத்தரவுகள் அன்புமணி ராமதாஸுக்கு சாதகமாக வந்தது. கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவை அன்புமணி ராமதாஸுக்கு தான் சொந்தம் என நீதிமன்ற உத்தரவு கிடைத்திருக்கும் நிலையில் உற்சாகமடைந்திருக்கும் அன்புமணி தரப்பு அடுத்த கட்ட வேலைகளை துவக்கி விட்டது.
அன்புமணி ராமதாஸ்
மறுபுறம் நீதிமன்ற படிக்கட்டுகளை நோக்கி ராமதாஸ் தரப்பு நகர்ந்து வருகிறது. எது எப்படி எனினும் தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவு அன்புமணி ராமதாஸுக்கு சாதகமாக இருக்கிறது. இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகளை ஆராய்ந்த அன்புமணி தரப்பு தற்போது அதனை அதிமுக தலைமையிடம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. சுமார் 25 தொகுதிகள் அந்த பட்டியலில் இருக்கும் நிலையில் 18 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளன.
பாமக தொகுதி பங்கீடு
தற்போது பாமக வட்டாரங்களில் கிடைத்த தகவல் படி, அந்தியூர், அரூர், ஆற்காடு, ஓமலூர், கும்மிடிப்பூண்டி, குன்னம், சங்கரகிரி, சோளிங்கர், செய்யாறு, செஞ்சி, திண்டிவனம், தர்மபுரி, திருவள்ளூர், நெய்வேலி, பாப்பிரெட்டி, பாலக்கோடு, பென்னாகரம், புவனகிரி, மயிலம், விருத்தாச்சலம், விழுப்புரம், விக்கிரவாண்டி, ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளை அதிமுகவிடம் கொடுத்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சி.
பாமக போட்டியிடும் தொகுதிகள்
அதில், அந்தியூர், ஆற்காடு, ஓமலூர், கும்மிடிப்பூண்டி, குன்னம், சங்கரகிரி, சோளிங்கர், செய்யாறு, செஞ்சி, திண்டிவனம், தர்மபுரி, நெய்வேலி, பாலக்கோடு, பென்னாகரம், புவனகிரி, விருத்தாச்சலம், விக்கிரவாண்டி, ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. ஆனால், இது கிடைத்த தகவல்படி உத்தேச பட்டியல் தான்.
அதிமுக - பாமக
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அதிமுக பாமக தரப்பு அமர்ந்து பேசி இந்த தொகுதிகளில் சில மாற்றங்களுடன் இறுதியாகலாம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே பாமகவில் விருப்பமனு பெறப்பட்டு வரும் நிலையில் அன்புமணி ராமதாஸ் அடுத்த கட்டமாக வேட்பு மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்த இருக்கிறார். அதற்கு பிறகு பாமகவின் தொகுதி பட்டியலும் வேட்பாளர் பட்டியலும் வெளியாகும் என்கின்றனர்.
-
பொற்கொடிக்கு சப்போர்ட்டுக்கு போன பா.ரஞ்சித்! திருமாவளவனுக்கு என்ன சொன்னாருனு பாருங்க! -
என் மனைவி சங்கீதா.. பேங்க் அக்கவுண்டில் கோடிக்கணக்கில் போட்டு வைத்த விஜய்! தங்கம் மட்டும் இவ்வளவா? -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. 4 நாள் லீவை விடுங்க! ‘இதை’ மட்டும் கண்டிப்பாக மறக்காதீங்க! -
ஒவ்வொரு தொகுதியிலும் உங்க விஜி! தவெக லிஸ்ட்டில் இதை கவனிச்சீங்களா? ’விஜய்’ பெயரில் 17 வேட்பாளர்கள்! -
தமிழக சட்டசபை தேர்தல் 2026.. இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்.. 4 நாட்களே செய்ய முடியும்! -
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியது.. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் என்ன? -
ஜோசப் விஜய் பெரம்பூரில் கால் வெச்சதுமே? புகையுது தவெக? ரூ.100 கோடி பிராமிஸ் தந்த அந்த விஐபி யார் -
திமுகனாலும்.. தவெகனாலும்.. சீட்டுகளை அள்ளும் மாஜி அதிமுக தலைகள்! விஜய் லிஸ்ட்டில் யார் யார் பாருங்க! -
தவெக-வில் சேர்ந்த 3 நாளில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்.. உதயநிதி தொகுதியில் களமிறங்கும் செல்வம்! -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி!











Click it and Unblock the Notifications