வணிக நிறுவனங்கள், பள்ளிகளுக்கு மின் கட்டணம் உயர்கிறதா? அமைச்சர் சிவசங்கர் அறிக்கையில் ட்விஸ்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். அதேபோல் அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்று கூறி இருக்கிறார். இருந்தாலும், வீட்டு மின் இணைப்புகள் என்று மட்டும் கூறி இருப்பதால், வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 4 முறை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என்று 3 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணத்தை மின் வாரியம் வசூலித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக கூறி இருந்தது. இதனிடையே தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை 3 சதவிகிதம் வரை உயர்த்த மின்சார வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை. எனினும் ஒழுங்குமுறை தொடர்பான ஆணையை ஆணையம், வழங்கிடும்போது, மின்கட்டணம் அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல் தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும் என்று கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டு மின் இணைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படாது என்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் வீடுகள் தவிர்த்து பள்ளிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications