ஏற்றுமதியாளர் ஆகணும்னு ஆசையா? தமிழக அரசு தரும் அற்புத வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க.. வருத்தப்படுவீங்க!
சென்னை: ஏற்றுமதியாளராக வேண்டும் என்ற கனவுடன் வலம் வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அற்புத வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது தமிழக அரசு.
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் அளிக்கும் 3 நாள் பயிற்சி ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்புவோருக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

மதியம் 2.30 டூ மாலை 5.30
இந்தியாவில் தற்போது உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது.தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்ககளையும் குறித்த இணையவழி கருத்தரங்கம் வரும் 31ஆம் தேதி முதல் 2 ஆம் தேதி வரை (3 நாட்கள் மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) வழங்க உள்ளது.

ஏற்றுமதி-இறக்குமதி
இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்ககான வாய்ப்புக்கள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவனியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை பயிற்றுவிக்கப்படும்.

10ம் வகுப்பு தேர்ச்சி
மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும். ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம்.

முன்பதிவு விவரம்
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications