1000+2000+3000.. அடுத்தடுத்து அக்கவுண்டில் விழுந்த பணம்! காலையிலேயே மக்களுக்கு சர்ப்ரைஸ் மெசேஜ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த எஸ்எம்எஸ் வரத் தொடங்கி இருக்கிறது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் 2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான வட்டி தொகையை இபிஎஃப்ஓ வரவு வைக்க தொடங்கியுள்ளது. ஊழியர்களின் ஒவ்வொரு அக்கவுண்டிலும் தற்போது ஆயிரம் ரூபாய் முதல் அவர்களின் சேமிப்புக்கு ஏற்றவாறு தனித் தனியாக வட்டிப் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இபிஎஃப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம் நிறுவனங்களிடமிருந்து சந்தவாக பெறுகிறது. மேலும், ஊழியர்களை பணிக்கு வைத்திருக்கும் நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் சந்தா தொகையாக செலுத்துகின்றன.

இதன் மூலம் வருங்கால வைப்பு நிதி மற்றும் பென்ஷன் நிதி ஆகியவை ஊழியர்களின் வங்கி கணக்கில் பராமரிக்கப்படுகிறது. பணியில் இருந்து ஓய்வு பெறும்போது அந்த நிதி தொழிலாளர்களுக்கு மொத்தமாக வழங்கப்படுகிறது.

EPFO PF Interest

பிஎஃப் வட்டி

இடையில் மருத்துவம், வீடு கட்டுதல் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு பி எஃப் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஒரு ஊழியர் எத்தனை நிறுவனங்களில் வேலை பார்த்தாலும் ஒரே UAN கணக்கு பராமரிக்கப்படுகிறது. அதில் உள்ள இருப்பு தொகைக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிர்ணயிக்கும் வட்டி விகிதத்தின் அடிப்படையில் வட்டி சேர்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 2025-26 நிதியாண்டுக்கான வட்டி விகிதமாக 8.25 சதவீதம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த வட்டித் தொகை உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

வட்டி வரவு

இந்த நிலையில் கடந்த வாரத்திலிருந்து வருங்கால வைப்பு நிதி கணக்குகளுக்கு வட்டித் தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. ஊழியர்கள் தங்கள் கணக்கில் இருப்பு வைத்துள்ள தொகைக்கு 8.25 % வட்டியுடன் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. ஆயிரம் ரூபாய் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை கூட வட்டி தொகையானது வர வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் வட்டி தொகை வரவு வைக்கப்பட்டது உறுப்பினர்களின் மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் ஆக அனுப்பப்பட்டு வருகிறது.

மெம்பர் இ சேவா

மேலும் ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை மெம்பர் இ சேவா (Member e-Sewa) இணையதளத்திலும் உமாங் (UMANG) செயலி மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் பிஎப் இருப்பு மாதாந்திர பங்களிப்பு வட்டித் தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எளிதாக பார்க்க முடியும். இணைய வசதி இல்லாதவர்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து இபிஎஃப் வழங்கியுள்ள எஸ்எம்எஸ் சேவையை அல்லது மிஸ்டு கால் சேவையை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

பாஸ்புக் லைட்

மேலும் சமீபத்தில் பாஸ்புக் லைட் (Passbook Lite) வசதி அனுப்பு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அதன் மூலமாகவும் விரைவாக பார்க்கும் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆன்லைனில் பிஎஃப் இருப்பை சரிபார்க்க, உறுப்பினரின் UAN (Universal Account Number) செயல்பாட்டில் இருக்க வேண்டும். அதோடு, ஆதார், பான் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் UANஉடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த விவரங்கள் சரியாக இருந்தால் மட்டுமே EPFOவின் அனைத்து டிஜிட்டல் சேவைகளையும் முழுமையாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+