பிஎஃப் புதிய விதி.. இனி கைக்கு வரும் சம்பளம் குறையுமா? அதிகரிக்குமா? புதிய கணக்கு சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி விதிகளில் மிக முக்கியமான ஒரு வரலாற்று முடிவை எடுத்துள்ளது. ஊழியர்களுக்கான கட்டாய பிஎஃப் வரம்பு மாதத்திற்கு ₹15,000 என்பதிலிருந்து ₹25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு, அதாவது சுமார் 12 ஆண்டுகள் கழித்து இந்த ஊதிய வரம்பு மாற்றப்பட்டு, 2026 செப்டம்பர் 17 முதல் அமலுக்கு வந்துள்ளது. மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது சாமானிய உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

EPFO

மாதச் சம்பளத்தில் என்ன மாற்றம் ஏற்படும்?

இந்த புதிய விதியால் அதிகம் தாக்கத்தை சந்திக்கப் போவது மாதம் ₹15,000 முதல் ₹25,000 வரை சம்பளம் வாங்கும் ஊழியர்கள் தான். இதுவரை இந்த சம்பளப் பிரிவில் இருந்தவர்கள் கட்டாய பிஎஃப் வரம்புக்குள் வரவில்லை. பல தனியார் நிறுவனங்கள் இவர்களுக்கு பிஎஃப் பிடிக்காமல் மொத்தப் பணத்தையும் கையில் கொடுத்து வந்தன. ஆனால் புதிய விதியின்படி, இவர்களுக்கும் பிஎஃப் பிடித்தம் கட்டாயமாக்கப்படுகிறது.

இதனால் ஊழியர்களின் கைகளில் நேரடியாகக் கிடைக்கும் மாதச் சம்பளம் (Take-home pay) உடனடியாகக் குறையும்.

₹18,000 சம்பளம் பெறுபவர்: இவரது சம்பளத்தில் பிஎஃப் பிடித்தம் போக மீதித் தொகை குறையும். கூடுதல் பிடித்தமாக மாதம் ₹360 வரை கழிக்கப்படலாம்.

₹20,000 சம்பளம் பெறுபவர்: 12% ஊழியர் பங்களிப்பு முறைப்படி மாதம் சுமார் ₹2,400 வரை பிடித்தம் செய்யப்படும். அதாவது வருடத்திற்கு ஏறத்தாழ ₹28,800 வரை கைக்கு வரும் பணத்தில் குறைவு ஏற்படும்.

₹25,000 சம்பளம் பெறுபவர்: புதிய வரம்பின் உச்சத்தில் இருக்கும் இவருக்கு மாதம் ₹3,000 வரை பிடித்தம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ₹36,000 வரை பணப்புழக்கம் குறையும்.

இந்த மாற்றத்தை ஊழியர்கள் தங்களின் அடுத்த மாத சம்பளச் சீட்டிலேயே நேரடியாக உணர முடியும் என நிதித்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இது ஊழியர்களுக்கு நஷ்டமா?

கையில் வாங்கும் சம்பளம் குறைவதால் ஆரம்பத்தில் இது ஒரு சுமையாகத் தோன்றலாம். ஆனால் நீண்ட கால நோக்கில் இது ஊழியர்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய சேமிப்பு பலன் ஆகும்.

ஊழியரின் சம்பளத்தில் இருந்து 12% பிடித்தம் செய்யப்படும் அதே வேளையில், அதே அளவு தொகையை (12%) வேலை வழங்கும் நிறுவனமும் ஊழியரின் பெயரில் முதலீடு செய்கிறது. எனவே ஊழியர் கையில் இருந்து செல்லும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நிறுவனமும் சரிசமமாகப் பணம் போடுகிறது. இதன் மூலம் ஊழியர்களின் பெயரில் ஓய்வு காலத்திற்கு ஒரு பெரும் நிதித் தொகுப்புவேகமாக உருவாகும்.

பென்ஷன் தொகை பல மடங்கு உயரும்

இந்த விதியின் மிகப்பெரிய நன்மையே ஊழியர்களின் மாதாந்திர ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) தான் உள்ளது. நிறுவனம் செலுத்தும் 12% பங்களிப்பில் 8.33% தொகை பென்ஷன் திட்டத்திற்கு செல்கிறது.

பழைய விதியின்படி, அதிகபட்ச பென்ஷன் சம்பளம் ₹15,000 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனால் நிறுவனத்தின் பங்களிப்பு மாதம் வெறும் ₹1,250 ஆக மட்டுமே முடங்கிப் போயிருந்தது. இப்போது ஊதிய வரம்பு ₹25,000 ஆக உயர்ந்துள்ளதால், நிறுவனத்தின் மாதாந்திர பென்ஷன் பங்களிப்பு ₹2,083 ஆக அதிகரிக்கும். அதாவது மாதம் ₹833 கூடுதலாக பென்ஷன் கணக்கில் சேரும்.

இந்த உயர்வின் மூலம்:

30 ஆண்டுகள் பணி அனுபவம்: பழைய கணக்கீட்டின்படி ஓய்வு பெறும்போது மாதம் ₹6,429 மட்டுமே பென்ஷன் கிடைத்த இடத்தில், இனி சுமார் ₹10,714 வரை கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது மாதம் ₹4,285 கூடுதல் பென்ஷன் கிடைக்கும்.

35 ஆண்டுகள் பணி அனுபவம்: முழு பணிக்காலமும் புதிய வரம்பில் கணக்கிடப்பட்டால், மாதாந்திர பென்ஷன் தொகை ₹7,500-லிருந்து ₹12,500 வரை உயரும். இது சுமார் 66% நேரடி உயர்வாகும்.

பழைய ஊழியர்களுக்கு இந்த பென்ஷன் முழுமையாகக் கிடைக்குமா?

ஏற்கனவே பல ஆண்டுகளாகப் பணியில் உள்ள ஊழியர்களுக்கு ஒரு நிபந்தனை உண்டு. அவர்களின் கடந்த கால பணிக்காலத்திற்கு இந்த புதிய வரம்பு பின்னோக்கி பொருந்தாது. புதிய விதி அமலுக்கு வந்த தேதியிலிருந்து அவர்கள் செய்யும் பணிக்காலத்திற்கு மட்டுமே இந்த ₹25,000 வரம்பு கணக்கில் கொள்ளப்படும். இதனால் நடுப்பகுதியில் இருக்கும் ஊழியர்களுக்கு பழைய மற்றும் புதிய விதிகளின் கலவையாக பென்ஷன் தொகை நிர்ணயிக்கப்படும்.

புதிய பணிப்பாதுகாப்பு

இந்த முடிவின் மூலம் நாடு முழுவதும் லட்சக்கணக்கான புதிய தொழிலாளர்கள் பிஎஃப் சேமிப்பு, பென்ஷன் மற்றும் ஊழியர் காப்பீட்டுத் திட்டம் ஆகிய சமூகப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படுகிறார்கள். ஆரம்பத்தில் கையில் வாங்கும் ரொக்கப் பணம் குறைந்தாலும், பணி ஓய்வுக்குப் பிறகான பாதுகாப்பான வாழ்க்கைக்கு இந்த மாற்றம் ஒரு நல்ல அடித்தளமாக அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+