எல்லாம் உங்களால்.. சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே! ‘மாஜிக்களிடம்’ பாய்ந்த ’சேலம்’! இதுதான் காரணமா?
சென்னை : அதிமுகவில் தற்போது தனது தரப்பு அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்து வருவதற்கு 'வட' மாவட்டம் மற்றும் 'டெல்டா' மாவட்டத்தை சேர்ந்த இரு நிர்வாகிகள் தான் காரணம் என கருதும் எடப்பாடி பழனிச்சாமி சிறிது காலத்திற்கு அவர்களை அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களாக எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கி இருந்த நிலையில் தற்போது அரசியல் காற்று ஓபிஎஸ் பக்கம் வீச தொடங்கி இருக்கிறது.
எந்த பொதுக்குழுவில் தனது சொந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டாரோ தற்போது அந்த பொதுக்குழுபே செல்லாது என நீதிமன்றத்தில் தடை வாங்கி இருக்கிறார்.

அதிமுக பொதுக்குழு
அவசரகதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும் மீண்டும் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையில் தற்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். எது எப்படி எனும் நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்ற நெருக்கடி இரு தலைவர்களுக்கும் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் ஒன்றிணைவதை தவிர வேறு வழியில்லை என்றாலும் அதற்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

அடுத்தது என்ன?
இப்படி ஒவ்வொரு நாளும் அடுத்து என்ன நடக்கும் என அதிமுக தொண்டர்களும் கட்சியின் இரு பெரும் தலைவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் நீதிமன்ற மேல்முறையீட்டு தீர்ப்பின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட முடிவுகளை எடுக்க இருதரப்பு நிர்வாகிகளும் ஆயத்தமாகி வருகின்றனர். இதைவைத்து கட்சியில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நீக்கப்பட்ட தலைவர்கள் மீண்டும் கட்சிக்குள் பிரவேசம் செய்ய தயாராகி வருகின்றனர்.

இரு மாஜிக்கள்
இந்நிலையில் அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமியின் பின்னடைவுக்கு பொதுக்குழுவில் நடைபெற்ற சில அவசர முடிவுகளே காரணம் எனக் கூறப்படுகிறது. ஜூன் 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் தீர்மானங்களை முன் வைப்பதற்கு முன்னதாகவே அவை செல்லாது என இரு முன்னாள் அமைச்சர்கள் மேடையில் ஆவேசமாக பேசினார். இதுவே அவர்களுக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது. எந்த வகையான தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது என்பது கூட தெரியாமல் அவற்றை நிராகரித்தது எப்படி? ஓ.பன்னீர்செல்வத்தை அவரது விளக்கம் கூட கேட்காமல் அவசர அவசரமாக நீக்கியது ஏன் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அதிமுக தொண்டர்களை தலைமையிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமைதியாக இருங்க..
மேலும் பொதுக்குழுவுக்கு முன்னரும் பொதுக்குழுவுக்கு பின்னாலும் டெல்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக பேசிக்கொள்வதாக நினைத்துக்கொண்டு ஓ.பன்னீர்செல்வத்தை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். இதேபோல பொதுக்குழுவிலும் ஒரு வட மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மிக ஆவேசமாக நடந்து கொண்டார். தற்போது ஓபிஎஸ் தரப்பு அவர்களை குறி வைத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் நீங்கள் அவசரப்பட்டு பேசியதால்தான் இவ்வளவு பிரச்சனை எனவே சிறிது காலத்திற்கு அமைதியாக இருங்கள் என எடப்பாடி தரப்பு அவர்களிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ஹார்ட் டிஸ்க் திருட்டு: தூரசக்தியை காப்பாற்ற நினைக்கும் பேரசக்தி? சிபிஐ விசாரணை தேவை! எடப்பாடி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications