சாதி, மத ஏற்றத்தாழ்வை கொளுத்தி தூக்கி எறியனும்.. பிக்பாஸில் விக்ரமன் நெத்தியடி! பாராட்டிய கமல்ஹாசன்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் முன்பாக மக்கள் மத்தியில் சாதி, மத, மொழி, இன, பாலின அடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வுகள் ஒழிய வேண்டும் என்று போட்டியாளரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான விக்ரமன் தெரிவித்தது மக்கள் மத்தியில் கரவேற்பை பெற்று உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. கடைசி வாரத்தில் போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.
பொங்கல் பண்டிகை வாரத்தை முன்னிட்டு எலிமினேட் ஆகி வெளியில் சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்கு வந்து தங்கி உள்ளார்கள். அவர்கள் வருகையில் மீண்டும் வீட்டில் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன.

கமல்ஹாசன் பங்கேற்ற நிகழ்ச்சி
இந்த நிலையில், நேற்று கமல்ஹாசன் பங்கேற்ற சனிக்கிழமை நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மற்றும் முன்னாள் போட்டியாளர்களிடம் போகியை முன்னிட்டு பழைய விசயங்கள் எதை கொளுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என கேட்டார். போட்டியாளர்கள் தங்களிடம் உள்ள தனிப்பட்ட பிரச்சனைகள், குறைகளை மாற்றிக்கொள்ளுமாறு காகிதத்தில் எழுதி கிழித்து போட்டனர்.

சாதி, மத ஏற்றத்தாழ்வுக்கு எதிராக விக்ரமன்
அந்த வரிசையில் விக்ரமன் பேசுகையில் சமூக ஏற்றத்தாழ்வு என்று காகிதத்தில் எழுதி அதை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். அவர் பேசுகையில், "இங்கு மனிதனை மனிதனாக பார்க்க தடையாக இருக்கக்கூடிய நிறைய சமூக ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. ஜாதி, மதம், இனம், மொழி, பாலினம், பாலின ஈர்ப்பு என்று எல்லாம்.

கொளுத்தி தூக்கி எறியனும்
இந்த அத்தனை ஏற்றத்தாழ்வுகளும் ஒழியனும் என்று விரும்புகிறேன். இந்த போகி என்ற திருநாளை கொண்டாடுவது என்பது பழைய கழிதல் என்றால் என்னை பொருத்தவரை இதுபோன்ற ஏற்றத் தாழ்வுகள்தான் பழையனவாக இருக்கனும். அந்த பழையன மொத்தமும் கழியனும். கொளுத்தி தூக்கி எறியனும் என்று விரும்புகிறேன். சார்." என்றார்.

பாராட்டிய கமல்ஹாசன்
இதை கேட்ட கமல்ஹாசன், "நிறைய வேலை உள்ளது. நீங்கள் சொன்ன அதையெல்லாம் எரிக்க வேண்டும் என்றால் வெளியில் நிறைய வேலை இருக்கிறது உங்களுக்கு. ஆனால், இது உங்களுக்கு ஒரு நல்ல தளம். நீங்கள் விரும்பும் விசயங்களை சொன்னால் கேட்கிற குரலை மக்களே உங்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள்.

இறுதிப்போட்டிக்கு சென்ற விக்ரமன்
அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், உடனே வந்து அதை பண்ண முடியாது என்பது அவர்களுடைய முடிவு. நீங்கள் சேவ் ஆகி உள்ளீர்கள்." என்றார். இதனை கேட்ட விக்ரமன், "14 வாரங்கள் கடந்தும் மக்கள் என்னை ஆதரித்து உள்ளார்கள். தமிழ் பெருங்குடி மக்களுக்கும் அண்ணன் ஆகிய உங்களுக்கும் என் நன்றி." என்று தெரிவித்தார்.

சமூக நீதி பேசும் விக்ரமன்
பத்திரிகையாளராக இருந்த விக்ரமன் பிக்பாஸில் சக போட்டியாளர்கள் செய்யும் தவறுகளாஇ முகஸ்துதி காட்டாமல் துணிச்சலாக தட்டிக்கேட்பவராக உள்ளார். அதேபோல் கோபமூட்டும் தருணங்களில் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக அதை கையாண்டு வருகிறார். பிக்பாஸ் வீட்டில் யாராவது ஒருவர் பிற்போக்குத் தனமான கருத்துக்களை தெரிவித்தால் முதல் ஆளாக அதை எதிர்த்து வருகிறார்.

மக்களின் மகத்தான ஆதரவு
பெரியார், அம்பேத்கர், சமூக நீதிக்காக பல தருணங்களில் பேசி இருக்கிறார். சமூக நீதியின் பூமியான தமிழ்நாட்டில் விக்ரமனின் இந்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் தற்போது அவரை இறுதிப்போட்டி வரை மக்கள் தகுதிபெற வைத்து உள்ளார்கள். பிக்பாஸ் கோப்பையை வெல்வதற்கு விக்ரமனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications