ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு - திமுக அறிவிப்பு
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி திமுக தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலினுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்புக்கு பிறகு திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்குத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா (வயது 46), உடல்நலக்குறைவால் கடந்த 4- ஆம் தேதி மரணம் அடைந்தார். இதனை அடுத்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலியானது.
1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒரு தொகுதி காலியானால் அங்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. எனவே ஈரோடு இடைத்தேர்தலில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது.

பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல்
அதன்படி, நேற்று மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்போடு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இதனால் தற்போதே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.

காங்கிரஸ் கட்சி தான் போட்டியிடும்
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியே அங்கு மீண்டும் போட்டியிடும் என்று கூறப்பட்டு வந்தது. இதை ஆமோதிக்கும் வகையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி , இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிடும். இது எங்களுடைய தொகுதி. நாங்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி.

மு.க ஸ்டாலினுடன் சந்திப்பு
எங்களின் கூட்டணி கட்சிகளான திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எங்களுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்க உள்ளோம். இன்று மாலை அனைத்து தலைவர்களையும் சந்திக்க உள்ளோம்" என்றார். இந்த நிலையில் இன்று இரவு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினை கே.எஸ் அழகிரி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டி
இந்த சந்திப்பு நடைபெற்ற சிறிது நேரத்தில் ஈரோடு கிழக்க்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று திமுக அறிவித்தது. 2021 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவனின் மருமகளும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகனின் இணையருமான பூர்ணிமா அவர்களை ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வைப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

வேட்பாளர் யார்?
ஈவிகேஎஸ் இளங்கோவனின் இரண்டாவது மகன் சம்பத் இளங்கோவன் போட்டியிடலாம் எனவும் சொல்லப்படுகிறது. விரைவில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. அதிமுகவை பொறுத்தவரை அக்கட்சி போட்டியிட்டால் சின்னம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், கடந்த தேர்தலில் போட்டியிட்ட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியே போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

ஜி.கே வாசன் பேட்டி
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால், இந்த முறை தனிச்சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தப்படும் எனவும் பேசப்படுகிறது. இன்று காலை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசனை அதிமுக மூத்த தலைவர்கள் சந்தித்து இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜிகே வாசன், அதிமுக கூட்டணியில் வேட்பாளர் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவர். எங்கள் இலக்கு கூட்டணி உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்பதுதான்" என்றார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications