எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸுக்கே சவால் விடும் குலசை ராக்கெட் ஏவுதளம்! கனிமொழி - மயில்சாமி சந்திப்பு
சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையும் திட்டம் குறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுறை, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழியை சந்தித்து பேசியுள்ளார்.
இந்தியாவில் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்துதான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசு சார்பில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 1300 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பணிகளை வேகமாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ராக்கெட் ஏவுதளம் அமைப்பதால் என்ன பயன்?
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையும் பட்சத்தில், தென் தமிழகத்தில் தொழில் வளம் பெரும் வளர்ச்சியை எட்டுவதோடு, நேரடியாகவும் மறைமுகமாகவும் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல், ராக்கெட் உரிதி பாகங்களை தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் தென் தமிழகத்தில் உருவாகும் வாய்ப்புகள் அதிகமுள்ளது என்று கூறப்படுகிறது.

எலான் மஸ்க்-கும், ராக்கெட் ஏவுதளமும்
உலக அளவில் சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் வைத்திருப்பதில் டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலன் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் தளம் தான் முக்கியமானதாக உள்ளது. இதன் மூலம் சுமார் 42,000 செயற்கைகோள்களை நிறுவ திட்டமிட்டிருக்கிறார். ஆனால், குலசேகரப்பட்டிணத்தில் ஏவு தளம் அமைந்தால் ஸ்பேஸ் எக்ஸ்சை விட அதிவேகமாகவும் அதிக எண்ணிக்கையிலும் நாம் செயற்கை கோள்களை விண்ணில் ஏவ முடியும்.

குலசேகரப்பட்டிணத்தால் என்ன லாபம்?
குலசேகரப்பட்டிணம் பூமத்தியரேகைக்கு அருகே உள்ளதால், ராக்கெட் மூலம் ஏவப்பட்டு செயற்கைக்கோள் விண்வெளியில் நிலை நிறுத்த குறைந்த அளவிலான எரிபொருளே செலவாகும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் குறைந்த செலவாகும் என்பதால், உலக நாடுகளுக்கு குலசேகரப்பட்டிணத்தில் இருந்து அதிகளவில் செயற்கைகோள்களை ஏவ முடியும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

கனிமொழி - மயில்சாமி அண்ணாதுரை சந்திப்பு
இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்ட எம்.பி. கனிமொழியுடன் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை சந்தித்து ராக்கெட் ஏவுதளம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த ஆலோசனையின் போது, ராக்கெட் ஏவுதளம் அமைவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கனிமொழியிடம் எடுத்து கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்டறிந்த கனிமொழி எம்.பி., ராக்கெட் ஏவுதளம் அமையும் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசுவதாக உறுதியளித்துள்ளார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
27 ஆண்டுகளுக்கு பிறகு.. இன்று ப்ளூ மைக்ரோ மூன்! மிஸ் பண்ணாதீங்க மக்களே!












Click it and Unblock the Notifications