நேற்று! இன்று! நாளை..! சசிகலா நீக்கத்தில் என்றும் ஒரே நிலை தான்! OPS-க்கு ஜெயக்குமார் பதில்!
சென்னை: அதிமுகவில் சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எப்போதும் இடமில்லை. நேற்று- இன்று- நாளை என சசிகலா நீக்கத்தில் ஒரே நிலைதான் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திடம் நிருபர்கள் கேட்டதற்கு ஓபிஎஸ் அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் முடிவு.
அதிமுக தொண்டர்களின் இயக்கம். இரட்டை தலைமையின் கீழ் கழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை என கூறி வரும் நிலையில் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் சசிகலாவை ஆதரித்து கூறியது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சசிகலா குறித்து கட்சியின் சில மூத்த தலைவர்களான செல்லூர் ராஜு, ஜே சி டி பிரபாகர் உள்ளிட்டோர் ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர்.

கே பி முனுசாமி
ஆனால் ஜெயக்குமார், ஆதி ராஜாராம், கே பி முனுசாமி உள்ளிட்டோர் சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சசிகலாவுக்கு எதிராக பேசிய ஓபிஎஸ் திடீரென மதுரையில் ஆதரவாக பேசியதை அடுத்து அன்றைய தினமே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை அதிமுகவில் சேர்க்கக் கூடாது என கூறியவரே ஓபிஎஸ்தான் என விமர்சனம் செய்தார்.

பதிலுக்கு பதில்
இப்படியாக ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி ஆதரவாளர்கள் பதிலடி கொடுப்பதும், எடப்பாடி ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பதிலடி கொடுப்பதும் நடந்து வருகிறது. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் சசிகலா ஆதரவு கருத்து சொன்ன ஓபிஎஸ்ஸும் எதிர்ப்பு கருத்து சொன்ன எடப்பாடி பழனிச்சாமியும் மவுனம் காத்து வருகிறார்கள்.
Recommended Video

முன்னாள் அமைச்சர்
இந்த நிலையில் ராயபுரத்தில் இன்றைய தினம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவில் சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்றைக்கும் இடமில்லை.

எப்போதும் ஒரே நிலைதான்
நேற்று- இன்று- நாளை என சசிகலா நீக்கத்தில் ஒரே நிலைதான். அதிமுக எஃகு கோட்டை, எந்த கரையானாலும் அதை அரிக்க முடியாது என்றார் ஜெயக்குமார். இப்படியாக சசிகலா விவகாரம் அதிமுகவில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இனி என்ன நடக்கும் என்பது போக போகத்தான் தெரியும்.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்!












Click it and Unblock the Notifications