சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"துணிஞ்சிட்டீங்க".. ஸ்பாட்டில் 2 பெண்கள்.. "சம்பவம்" செய்த புதுக்கோட்டை கலெக்டர்.. திருமாவளவன் சபாஷ்

புதுக்கோட்டை கலெக்டருக்கு திருமாவளவன் வாழ்த்து தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு சம்பவத்தை விசாரிக்க சென்று, 3 விதமான பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளார் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்.. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட 2 பெண் அதிகாரிகளுக்கு விசிக தலைவர் திருமாவளவன், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
கல்வி கிடைத்தால், எல்லாவிதமான பாகுபாடுகளும் ஒழிக்கப்பட்டு விடும் என்று மலைபோல் நாம் நம்பி கொண்டிருந்தால், அப்படிப்பட்ட கல்வி நிலையங்களிலேயே சாதி தலைவிரித்தாடுகிறது..

கடந்த மாதம் ஈரோட்டில் அரசு தொடக்கப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்தி உள்ளார் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை.. ஊராட்சி தலைவரை தரையில் உட்கார வைக்கும் நிகழ்வு முதல் இன்னும் ஏராளமான சம்பவங்கள் நம் தமிழகத்தில் நடப்பது கவலைக்குரியதாக உள்ளது.

 குடிநீர் ஆதாரம்

குடிநீர் ஆதாரம்

இதோ இப்போதும் நம் புதுக்கோட்டையில் நடந்த சம்பவம் தமிழக மக்களை கவலை கொள்ள வைத்து வருகிறது.. இறையூர் வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி மட்டுமே, அவர்களுக்கான ஒரே குடிநீர் ஆதாரம் ஆகும்.. கடந்த சில தினங்களாகவே, அந்த பகுதி மக்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு, ஒவ்வாமை ஏற்பட்டு, ஒவ்வொருவராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.. சாப்பாடு அல்லது குடிநீரில் ஏதேனும் பிரச்சினை இருந்திருக்கலாம் என்று சொல்லி டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சையும் தந்தனர்..

 விலங்கு விலங்கு

விலங்கு விலங்கு

ஒருவேளை, தண்ணீர் தொட்டியில் ஏதேனும் விலங்கு இறந்து கிடக்கலாம் என்று நினைத்து, ஏறி பார்த்தபோது, தொட்டியில் மலம் கலக்கப்பட்டதை பார்த்து அதிர்ந்துபோனார்கள்.. விவகாரம் போலீஸ் வரை சென்றது.. இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு, மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே ஆகிய 2 பேருமே ஸ்பாட்டுக்கு வந்தனர்.. நேரடியாகவே வேங்கைவயல் கிராமத்துக்கு சென்று, மருத்துவப் பரிசோதனை முகாமைப் பார்வையிட்டனர்.. குடிநீர்த் தொட்டி குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்யப்படுகிறதா, மற்றவர்கள் ஏறும் வகையில் அந்த ஏணி திறக்கப்பட்டிருந்தது ஏன் என்று கலெக்டர் தன் ஆய்வின்போது கேள்வி எழுப்பினார்...

டீக்கடைக்காரர்

டீக்கடைக்காரர்

பிறகு, வேங்கைவயல் கிராமத்தினரிடம் குறைகளை கேட்டார். அப்போதுதான், வெள்ளனூர் தேநீர்க் கடையில் தலித் மக்களுக்கு தனி டம்ளரில் தேநீர் கொடுக்கப்படுவதாகவும், அங்குள்ள அய்யனார் கோவிலுக்குள் உள்ளே விடுவதில்லை என்றும் மக்கள் லிஸ்ட் போட்டு குறைகளை சொன்னார்கள். இதையடுத்து, அதிகாரிகளுடன் அந்த டீக்கடைக்கு சென்று இதுகுறித்து விசாரித்தார் கலெக்டர்.. ஆனால், தாங்கள் யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை என்று டீக்கடையில் விளக்கமளித்தனர்.. ஆனால், டீக்கடைக்கு உள்ளே கண்ணாடி டம்ளர், எவர்சில்வர் டம்ளர்கள் என பிரித்து வைக்கப்பட்டிருந்ததை பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளே, ஆதாரமாக ஆட்சியரிடம் காட்டினர்..

 மூக்கையா

மூக்கையா

இதையடுத்து, டீக்கடை ஓனர் மூக்கையா மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார் கலெக்டர். பின்னர், அய்யனார் கோவிலுக்குச் சென்ற கலெக்டர் கவிதா ராமு, கோயிலை நிர்வகிப்பவர்களிடம் யாரையும் சாமி கும்பிட மறுக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார். அப்போது, கோவிலுக்கு வெளியே சிங்கம்மாள் என்ற பெண் சாமி வந்ததை போல ஆடிக்கொண்டு, கோவிலுக்குள் இருந்தவர்களையும் தவறாக பேசினார். இதையடுத்து, அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அங்கேயே கைது செய்யப்பட்டார்.. பட்டியலின மக்கள் அங்குள்ள அய்யனார் கோயிலில் தாங்கள் அனுமதிக்கப்படுவதிவில்லை என்று புகார் சொன்னார்கள்.

 சபாஷ் குஷி

சபாஷ் குஷி

பிறகு, கோயிலின் சாவியை கேட்டு பெற்ற கலெக்டர், பட்டியிலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்தார். 3 தலைமுறைகளுக்கு பிறகு, அம்மக்கள் கோயிலுக்குள் நுழைந்துள்ளனர்.. தண்ணீர் தொட்டி பிரச்சனைக்காக கிராமத்தில் நுழைந்தபோது, டீக்கடை குவளை பிரச்சனை, கோயிலுக்குள் அனுமதி மறுப்பு உள்ளிட்ட பல விவகாரங்களை தீர்த்து வைத்தார்.. இந்த சம்பவம் மக்களிடையே பெரும் பாராட்டை பெற்று வருகிறது.. மேலும், முதல் நபராக தன்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் 2 பெண்மணிகளுக்கு தெரிவித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்..

நொறுங்குகிறது

நொறுங்குகிறது

இதுகுறித்து ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டில், "புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் சாதிவெறியர்களுக்கு அஞ்சி செயலிழந்து கிடக்காமல் துணிந்து களமிறங்கிநீதியின்பக்கம் நின்று நடவடிக்கைகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கவிதாராமு மற்றும் காவல் கண்காணிப்பாளர் #வந்திதா_பாண்டே ஆகிய இரு பெண்மணிகளையும் மனமாரப் பாராட்டுகிறோம் என்று பதிவிட்டுள்ளார்..

 கழண்டு விழுகிறது

கழண்டு விழுகிறது

அதுமட்டுமல்ல, "சேலம் மாவட்டம் , விருதாசம்பட்டி கிராமத்தில் தலித்துகளைக் கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுத்த சாதிப்பித்தர்கள் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்" என்று இன்னொரு ட்வீட்டையும் பதிவிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார் திருமாவளவன். தலித்களுக்கு தனிக்குவளை, கோயில் நுழைய மறுப்பு போன்ற பிரச்சனைகள், காலம் காலமாகவே ஊறிப்போன நிலையில், அவைகள் வலிய சட்டத்தின் மூலமும், பெண் அதிகாரிகளின் துணிச்சல்கள் மூலமும், சுக்குநூறாக தகர்ந்து விழுந்து கொண்டிருக்கின்றன..!!

விட்ற முடியாது

விட்ற முடியாது

இந்நிலையில், மாவட்ட கலெக்டர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கோயில்களில் சாதிய ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை பின்பற்றப்பட்டாலோ, முடித்திருத்தங்களில் சாதிய வேறுபாடு காணப்பட்டாலோ, சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் மேற்கண்ட குற்றங்கள் எந்த வடிவிலிருந்தாலும் பின்வரும் கைபேசி எண்ணிற்கு 9443314417 வாட்ஸ் அப் மூலமாக மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய தகவல் தெரிவிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

சமூக மறுமலர்ச்சி

சமூக மறுமலர்ச்சி

அன்று புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்றபோது, கவிதா ராமு ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.. அந்த பதிவில், "என்னை முழுமையாக அறியாதவர்களுக்கு இதை சொல்ல நான் விரும்புகிறேன். சமூக மறுமலர்ச்சி இயக்கங்களுக்குப் பெயர் போன மாநிலத்தைச் சேர்ந்தவள் நான். சமூக நீதி கருத்துக்கள் என்னுள் ஆழப் பதிந்துள்ளது. பெரியாரின் பகுத்தறிவு மற்றும் சீர்திருத்தச் சித்தாந்தங்களைக் கேட்டும், படித்தும் வளர்ந்தவள் நான். பெரியார் அறிவுறுத்திய சில கொள்கைகளை என் வாழ்க்கையில் செயல்படுத்துபவள்.

சக மனுஷி

சக மனுஷி

அதில் முக்கியமானது, சாதி எதிர்ப்பு. எனவே, எந்த ஓர் அடையாளத்திலிருந்தும் விடுபட்டு இருக்கும் என்னை, நீங்களும் அப்படியே பார்க்கக் கேட்டுக்கொள்கிறேன். அடையாளங்கள் சுமையாகிவிடுகின்றன. சில அடையாளங்கள் மனித இனத்துக்கு எதிராக அமையும் வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எனவே, நடனம் ஒன்றை மட்டுமே என் தனித்த அடையாளமாகச் சொல்லிக்கொள்ள நினைக்கிறேன். சக மனுஷியாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக நீதிக்கான பாதையில் என் சிறப்பான செயல்பாட்டைக் கொடுப்பேன்" என்று பதிவிட்டிருந்தார்.. கடந்த 2 நாட்காளகவே கவிதா ராமுவின் நடவடிக்கைகள், பாராட்டை பெற்றுவரும் நிலையில், இந்த பதிவையும் பதிவிட்டு, இணையத்தில் சிலர் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.

English summary
Excellent work and VCK Thirumavalavan has praised pudukottai collector sp for dalit issues
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X