சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரபல நடிகர் பிரபு ஹேப்பி.. கருணாநிதியை விடுங்க.. சிவாஜிக்கு ஸ்டாலினின் "முதல் மரியாதை" + புது சிலை

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு புதிய சிலையை திறந்து வைக்கிறார் முக ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தினருக்கும், சிவாஜியின் ரசிகர்களுக்கும், இதயம் குளிரும்படியான ஒரு அறிவிப்பை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவிக்க போகிறாராம்..!

தேசியமும் தெய்வீகமும் தன்னுடைய விழிகள் என்று வாழ்ந்து மறைந்தவர், நடிப்பு பல்கலைக்கழகம் சிவாஜி கணேசன்..!!

சிவாஜி கணேசனுக்கும், கலைஞர் கருணாநிதிக்குமான நட்பு என்பது மிகவும் ஆழமானது.. ஆத்மார்த்தமானது.. சிவாஜியின் நடிப்பு + உச்சரிப்பின் மூலமும்கூட, தனது புரட்சிகரமான கருத்துக்களை வார்த்தெடுத்தவர் கருணாநிதி.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 95 ஆவது பிறந்த நாள்! பெரியார் சூட்டிய புதுப் பெயர்! ருசிகர தகவல்! நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 95 ஆவது பிறந்த நாள்! பெரியார் சூட்டிய புதுப் பெயர்! ருசிகர தகவல்!

 கலைஞர்

கலைஞர்

சிவாஜியின் உச்சரிப்பினால் கலைஞரின் வசனங்கள் உயிர்பெறுகிறதா அல்லது கலைஞரின் வசனங்களால் சிவாஜியின் நடிப்பு பிரம்மிப்பை ஏற்படுத்துகிறதா? என்று குழம்பி போகும் அளவுக்கு இருவரும் கலைத்துறையை அலங்கரித்ததுடன், ஒரே நேர்கோட்டில் பயணித்தவர்கள். கலைஞரை எப்போதும் செல்லமாக, முனா கானா என்றுதான் அழைப்பாராம் சிவாஜி.. ஆட்சிக்கு அன்று கருணாநிதி வந்தபோது, தன்னுடைய முதல் பட்ஜெட் உரையிலேயே, சென்னை கடற்கரை சாலையில் சிவாஜிக்கு சிலை அமைக்கப்படும் என்று அறிவித்து, முழு உருவ வெண்கலச் சிலையை அமைத்தார் கருணாநிதி.

 கருணாநிதி

கருணாநிதி

இந்த சிலைக்கு எத்தனையோ சட்டசிக்கல்கள் எழுந்தன.. அவைகளை சட்டரீதியாக உடைத்தெறிந்து சிலையை நிறுவினார் கருணாநிதி.. அந்த சிலையை திறந்து வைத்து அன்று கருணாநிதி பேசியபோது, "எனது நண்பன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்" என்று என்று கண்ணீர் மல்க கூறியிருந்ததை தமிழகமே அன்று பார்த்து மலைத்தது.. ஆனால், இந்த சிலை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாகக் கூறி உடனே அகற்றினார் ஜெயலலிதா... இதற்கு சிவாஜி சமூக நல பேரவையின் தலைவரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவு தலைவருமான சந்திரசேகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

 நடிகர் பிரபு

நடிகர் பிரபு

இருந்தாலும், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி சிலையை அகற்றுகிறோம் எனும் தோற்றத்தை உருவாக்கி சிலையை அப்புறப்படுத்தியது ஜெயலலிதா அரசு. அதே சமயம், சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்கிற சிவாஜி சமூக நலப் பேரவையின் கோரிக்கையை ஏற்று சென்னை அடையாறு பகுதியில் சிவாஜிக்கு மணி மண்டபம் அமைத்தது அதிமுக அரசு. மணி மண்டபத்தில், சிவாஜியின் சிலையை மக்கள் பார்வையில்படும்படி அமைக்காமல், மண்டபத்தின் உள்ளே சிலையை வைத்தனர். இது, சிவாஜி குடும்பத்தினருக்கும் சிவாஜி ரசிகர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

 பச்சை கலர்

பச்சை கலர்

இந்த சூழலில், திமுக ஆட்சிக்கு வந்தது. சிவாஜி மணி மண்டபத்தை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின். அப்போது. சிவாஜியின் சிலை, மணிமண்டபத்தின் உள்ளே இருப்பதால் மக்கள் பார்வைக்கு தெரியவில்லை. மணிமண்டபமும் ஜெயலலிதாவுக்கு பிடித்த பச்சைக் கலரில் வடிவமைத்ததால் மணி மண்டபம் ஏதோ முஸ்லீம் இயக்கத்தினரின் கூடமாகவே தெரிகிறது. அதனால், சிவாஜியின் சிலை மக்களின் பார்வைக்கு படும்படி மண்டபத்தின் வளாகத்தில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்று ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார் சந்திரசேகரன். அதேபோல, சிவாஜியின் வாரிசான நடிகர் பிரபுவும் இதே கோரிக்கையை ஸ்டாலினிடம் வலியுறுத்தினார்.

 சூப்பர் + மணிமண்டபம்

சூப்பர் + மணிமண்டபம்

இதனையடுத்து, சிவாஜிக்கு புதிதாக ஒரு சிலை உருவாக்க உத்தரவிட்டிருந்தார் ஸ்டாலின். கடந்த மாதம் இதற்கான ஏற்பாடுகள் நடந்து சிலை தயாராகி விட்டது. அக்டோபர் - 1 ந்தேதி சிவாஜியின் பிறந்த நாள். அந்த நாளில் சிவாஜிக்கு புதிய சிலையை மணி மண்டபத்தின் வளாகத்தில் மக்களின் பார்வைக்கு நன்றாக தெரியும் வகையில் அமைக்கப்படவிருக்கிறது. இந்த சிலையை ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்கான பணிகளை கவனித்து வருகிறது திமுக அரசு.

English summary
famous actor Nadigar Thilagam Sivaji Ganesans statue and Chief Minister Stalin will inaugurate today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X