சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஏய்.. அறிவேயில்லை.. அது திராவிடம்".. நடிகை கஸ்தூரி அசரலையே... "டபுள் கேம்".. என்ன நடந்தது

நடிகை கஸ்தூரியின் ட்வீட்டுக்கு இணையவாசிகள் திரண்டு பதிலடி தந்து வருகிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: கஸ்தூரி ஒரு ட்வீட் பதிவிடவும், அதற்கு ஏகப்பட்ட இணையவாசிகள் திரண்டு வந்து பதிலடி தர ஆரம்பித்துவிட்டனர்.. ஆனால், கஸ்தூரி அவர்களுக்கே ஒரு ஷாக் தந்துள்ளார்.

சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் பேசிய பேச்சு, இணையத்தில் சர்ச்சையுடன் கலந்த விவாதத்தையும் எழுப்பி வருகிறது.

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது மற்றும் ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக சித்தரிப்பது போன்ற விஷயங்கள் நடைபெற்று வருகிறது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

ராஜராஜ சோழனை “இந்து” அரசனா மாத்திட்டாங்க - இயக்குநர் வெற்றிமாறன்.. ஆர்எஸ்எஸ் பேரணிக்கும் எதிர்ப்பு ராஜராஜ சோழனை “இந்து” அரசனா மாத்திட்டாங்க - இயக்குநர் வெற்றிமாறன்.. ஆர்எஸ்எஸ் பேரணிக்கும் எதிர்ப்பு

 கமெண்ட்கள்

கமெண்ட்கள்

அதற்கு, தஞ்சை பெரிய கோயிலை சிவனுக்காக கட்டிய ராஜ ராஜ சோழன் இந்து அரசன் இல்லையா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் வெற்றிமாறனிடம் முன்வைத்து வருகின்றனர்... அதற்கு பதிலாக சிவன் இந்து கடவுள் இல்லை என்றும், சைவ கடவுள் என்றும் வெற்றிமாறன் ரசிகர்கள் கமெண்ட் போட்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.. அதேசமயம், இது சினிமாவையும் கடந்து அரசியல் ரீதியான அதிர்வையும் உண்டுபண்ணி வருகிறது..

பாஜக

பாஜக

அதிலும் பாஜக கொந்தளித்து கிடக்கிறது.. எச்.ராஜா ஒருபக்கம், வானதி சீனிவாசன் மறுபக்கம், இவர்களுக்கு நடுவில் நாராயணன் திருப்பதி என ஹாட் பதில்களை பதிவிட்டு கண்டித்து வருகிறார்கள்.. "சிவன் கோவில் கட்டிய மாமன்னன் என்ன இஸ்லாமியரா அல்லது கிறித்தவரா, பௌத்தரா என்பதை அந்த தற்குறி சொல்லட்டும்" என்று எச். ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெற்றிமாறனை சீண்டியிருந்தார்.. அதே நேரத்தில், தமிழர்களின் அரசன்தான் ராஜ ராஜ சோழன் என்பதை அடையாளப்படுத்தவே வெற்றிமாறன் அப்படி பேசினார் என்றும் அவருக்கு ஆதரவான கருத்துக்கள் எழுந்து வருகின்றன.

 நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி

இப்படிப்பட்ட சூழலில் நடிகை கஸ்தூரியும் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.. "சோழர்கள் சிவனுக்கு மட்டுமல்ல, திருமாலுக்கும் பிள்ளையாருக்கும் குமரனுக்கும் கோயில் எழுப்பியவர்கள். கிழக்காசியா முழுதும் இந்துமதத்தை பரப்பியவர்கள். தமிழர் தனி, சைவர் இந்துவே இல்லை என்பவர்கள், தமிழை மற்றவையோடு இணைத்து திராவிடம் என்பார்கள் ! #பகுத்தறிவு_புரட்டு #doubleGame" என்று பதிவிட்டிருந்தார்.

கஸ்தூரி

கஸ்தூரி

இதற்கு நெட்டிசன்கள் பலரும் திரண்டு வந்து கஸ்தூரிக்கு ஆதரவும், எதிர்ப்பும் பதிவிட்டனர்.. சிலர் கஸ்தூரியிடமே டவுட் கேட்டனர்.. சோழர் காலத்தில் இந்து மதமா??? அதை நூலிபான்கள் அல்லவா கண்டுபிடித்தார்கள்!!!! எதாவது ஒரு கல்வெட்டில், குறிப்புகளில் இந்து என்ற வார்த்தை உண்டா??? இப்படி சிறப்பான இந்து மதத்தில் அனைவரும் சமம் னு சொல்லாம ஏன் 4 பிரிவினை இருக்கு....உயர்ந்தவர் தாழ்ந்தவர்ன்னு ஏன் பிரிச்சீங்க.... கோவிலுக்கு உள்ள நுழையவே விட மாட்டேங்கறீங்களே" என்றெல்லாம் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

 ஏ லூசே...

ஏ லூசே...

அதில் ஒருவர், ஏ லூசே... வெள்ளைக்காரன் இங்கே வரும்போது இந்து என்ற சொல்லே கிடையாது. அவன் போகும்போது உருவாக்கி தந்ததுதான். உனக்கு அறிவில்லை என்பதாலே எல்லாத்தையும் புரட்டுறதா? என்று கஸ்தூரியிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.. இந்த நபருக்கு கஸ்தூரியே பதிலளித்துள்ளார்.. அந்த ட்வீட்டை பதிவிட்டு 1) இந்து என்று வெள்ளையன் தான் பேரு வச்சான், அதுக்கு முன்னாடி யாரும் இந்து மதத்தை பின்பற்றவில்லை. 🤣 2) வெள்ளைக்காரன் oxygen கண்டுபிடிக்கும் வரை யாரும் மூச்சே விடல" என்று பதிலடி தந்துள்ளார். இப்படி பரபரப்பான ட்வீட்களால், கஸ்தூரியின் ட்விட்டர் பக்கமே இன்று அனலடித்து கொண்டிருக்கிறது.

English summary
Famous Actress Kasturi tweeted about Chozhas and Hindu Religion, what happened
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X