Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டபுள் மீனிங்.. ஆபாசமாக கேள்வி கேட்டு யூடியூப் சேனலில் வீடியோ.. இளம்பெண் தற்கொலை முயற்சி! 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்த இளம்பெண், திடீர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுவிட்டதால், சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் அந்த பெண்.. 23 வயது பட்டதாரியும்கூட.. இவருக்கு பெற்றோர் இல்லை.. எனவே அண்ணனின் கண்காணிப்பில், புரசைவாக்கம் பகுதியில் உள்ள பெண்கள் ஹாஸ்டலில் தங்கி வேலை தேடி வருகிறார்...

video young woman chennai police

அண்ணாநகர்: இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல ஷாப்பிங் காம்ப்ளக்சுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சென்றிருக்கிறார். அப்போது அவர், "வீரா டாக் டபுள் எக்ஸ்" என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. காதல் தொடர்பாக கேள்வி கேட்டிருந்தால், இந்த பெண் டபுள் மீனிங் வசனங்களுடன் ஜாலியாக அந்த பேட்டியை தந்திருந்தார்.

சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலின் பேட்டியானது, சோஷியல் மீடியாவில் வைரலானது.. இதற்கு ஏகப்பட்ட கமெண்ட்கள் குவிந்தன.. குறிப்பாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பேட்டி தந்த இளம்பெண்ணின் கருத்துக்கு கேலி-கிண்டல்கள் எழுந்தன..

பதற்றம்: இதைப்பார்த்ததுமே அந்த பெண் பதறிப்போய்விட்டார். தன்னுடைய பேட்டியை, தன்னுடைய அண்ணனோ அல்லது சொந்தக்காரர்களோ பார்த்தால் என்ன ஆவது? என்ற பதற்றத்திலும், மன உளைச்சலிலும் இருந்துள்ளார்..

ஒருகட்டத்தில் விரக்தியின் உச்சிக்கு போன அந்த பெண், எலி மருந்தை வாங்கி சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.. இதை பார்த்து பதறிப்போன அவரது தோழிகள், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.. இப்போது அந்த பெண் உயிர் பிழைத்துவிட்டார்.. ஆனால் தொடர்ந்து சிகிச்சை நடந்து வருகிறது.

video young woman chennai police

போலீஸ் விசாரணை: இந்த சம்பவம் தொடர்பாக தற்கொலைக்கு முயன்ற பெண்ணிடம் கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது போலீசாரிடம் சொன்னதாவது:

"நான் அந்த யூடியூப் சேனலுக்கு பேட்டி தர முதலில் மறுத்தேன்.. ஆனால் அவர்கள்தான் என்னுடைய அனுமதி இல்லாமல் பேட்டியை வெளியிட மாட்டோம் என்று சொன்னார்கள். அந்த நம்பிக்கையில்தான் நானும் ஜாலியாக கருத்துக்களை சொன்னேன்.. ஆனால் என்னுடைய அனுமதி இல்லாமல் அந்த பேட்டியை வெளியிட்டு விட்டார்கள். இது எனக்கு அவமானமாக போய்விட்டது. அதனால், சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீதும், பேட்டி எடுத்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த பெண் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிரடி கைது: இதையடுத்து கீழ்ப்பாக்கம் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலை நடத்தி வந்த வளசரவாக்கம் ஏ.கே.ஆர்.நகர் 1-வது தெருவை சேர்ந்த ராம் (வயது 21), உதவியாளர் யோகராஜ் (21), பேட்டி எடுத்த அண்ணாநகர் விஜயா தெருவை சேந்த ஸ்வேதா (31) என்ற பெண் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் இளம்பெண் ஒருவர் வாயில் நுரை தள்ளி விழுந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.. அதற்கு பிறகுதான் அந்த பெண்ணை, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.. சோஷியல் மீடியாவில் தன்னுடைய வீடியோவை பார்த்து பலரும் கேலி, கிண்டல்கள் செய்ததால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டதால், இந்த தற்கொலை முடிவை எடுத்ததாக போலீசாரிடம் அந்த பெண் தெரிவித்திருக்கிறார்.

இப்போது கைது செய்யப்பட்டுள்ள யூடியூப் சேனலின் 3 ஊழியர்களும் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்களாம். விரைவில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளதாகவும் தெரிகிறது.

முன்தனாக, சென்னை கீழ்ப்பாக்கம் மாநகராட்சி பூங்கா அருகில், இளம்பெண் ஒருவர் வாயில் நுரை தள்ளி விழுந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.. அதற்கு பிறகே அந்த பெண்ணை, உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்..

சோஷியல் மீடியாவில் தன்னுடைய வீடியோவை பார்த்து பலரும் கேலி, கிண்டல்கள் செய்ததால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டதால், இந்த தற்கொலை முடிவை எடுத்ததாக போலீசாரிடம் அந்த பெண் தெரிவித்திருக்கிறார்.

இப்போது கைது செய்யப்பட்டுள்ள யூடியூப் சேனலின் 3 ஊழியர்களும் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்களாம். விரைவில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளதாகவும் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+