Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஸ்டேக் வருடாந்திர பாஸ்! 3000க்கு 200 முறை ஹைவே பயணம்! ஆகஸ்ட் 15க்கு முன்பு எப்படி வாங்குவது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ் வாங்கிட்டீங்களா.. 3000 ரூபாய் செலவு செய்து வாங்கி கொண்டால் ஆண்டுக்கு 200 முறை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் வரும் இந்தியாவின் உள்ள எந்த சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் இன்றி பயணிக்க முடியும். சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. எனவே ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன்பு எப்படி வாங்குவது, என்ன வழிமுறை, யாருக்கு தகுதி உள்ளது.. யாரெல்லாம் வாங்க முடியாது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க ஃபாஸ்டேக் என்ற மின்னணு சுங்கச்சாவடி கட்டண வசூல் முறையை செயல்படுத்தி வருகிறது. இதன் அடுத்த அப்டேட் ஆக வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் வரும் ஆகஸ்ட் 15 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த வருடாந்திர பாஸ், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் நாட்டின் அதி விரைவுச் சாலைகளில் அடிக்கடி பயணிக்கும் தனியார் வாகன உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய வரமாக பார்க்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணமாக அதிகமான முறை கட்டணம் செலுத்தாமல் செலவை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

FASTag Annual Pass Get Yours for Rs 3 000 Before Aug 15 2025 Details amp amp Benefits 200 Trips

வழக்கமான ஃபாஸ்டேக் ரீசார்ஜ் முறையைப் போல் இந்த பாஸ் கிடையாது. பொதுவாக சுங்கச்சாவடிகளில் பாஸ் எடுக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் தனித்தனியாக மாதாந்திர பாஸ் எடுக்க வேண்டும். அதற்கு ஏராளமான கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். ஆனால் ஆண்டு பாஸ் 200 சுங்கச்சாவடி பயணங்கள் அல்லது ஒரு வருட செல்லுபடியாகும் காலத்திற்கான ப்ரீபெய்ட் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சுங்கச்சாவடி கட்டணங்கள் செலுத்துவது எளிதாக உள்ளது. திரும்பத் திரும்ப செய்யப்படும் ஆன்லைன் பரிவர்த்தனைகளைக் குறைக்க போகிறது. மேலும் அடிக்கடி சுங்கச்சாவடிகளில் நின்று கட்டணம் செலுத்துவதையும் குறைக்கும். எனவே பயண அனுபவமும் சொந்த வாகனம் வைத்துள்ளவர்களுக்கு சிறப்பானதாக இருக்க போகிறது. சரி விஷயத்திற்கு வருவோம். மத்திய அரசு அறிமுகம் செய்து ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ் என்றால் என்ன, அதற்கு தகுதி வரம்புகள் என்ன , எப்படி அதனை முறையாக அரசிடம் வாங்குவது, அதற்கான இணையதளம் என்ன, கட்டணம் எவ்வளவு, எப்படி அதனை பயன்படுத்துவது, யாருக்கு எல்லாம் ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ் கிடைக்காது என்பது உள்ளிட்ட விவரங்களை முழு விவரமாக பார்க்கலாம்.

ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் என்பது என்ன?

ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் என்பது மத்திய அரசால், கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற வர்த்தக ரீதியற்ற, தனியார் வாகனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ப்ரீபெய்ட் சுங்கச்சாவடி கட்டணத் திட்டம் ஆகும். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியால் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. சொந்த வாகன ஓட்டிகள் ரூ. 3,000 த்தை முன்கூட்டியே செலுத்தி, 200 சுங்கச்சாவடிகளில் எந்த கட்டணமும் இன்றி பயணிக்கலாம் அல்லது ரிசார்ஜ் செய்த தேதியிலிருந்து ஒரு வருட செல்லுபடியாகும் காலம் (எது முதலில் வருகிறதோ அது) ஆகியவற்றில் ஒன்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.இந்த திட்டப்படி வருடாந்திர பாஸ் பெற்ற வாகன ஓட்டிகள் தங்கள் ஃபாஸ்டேக் கணக்குகளை வருடத்திற்கு பல முறை ரீசார்ஜ் செய்யத் தேவையில்லை. இதனால் அடிக்கடி நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு சுங்கச்சாவடி கட்டணங்கள் எளிமையாக இருக்கும்.

புதிய பாஸ்டேக் வாங்க வேண்டுமா?

இந்த பாஸ் ஏற்கனவே உள்ள ஃபாஸ்டேக்குடன் இணைந்து செயல்படுகிறது என்பது மிகவும் கவனிக்க வேண்டிய அம்சம் ஆகும். எனவே இதற்கு என்று புதிய ஃபாஸ்டேக் வாங்க வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, வாகன ஓட்டிகள் தற்போதைய ஃபாஸ்டேக்குடன் ஆண்டு பாஸை இணைத்துக் கொள்ளலாம்.

3000 பாஸ் எங்கு பொருந்தும்

இந்த 3000 பாஸ் என்பது தேசிய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் (MoRTH) இயக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு மட்டும் பொருந்தும். இந்தியா முழுவதும் 200 சுங்கச்சாவடிகளில் பயணிக்கலாம். ஆனால் ஃபாஸ்டேக் அமைப்பில் இணைக்கப்படாத உள்ளூர் சுங்கச்சாவடி சாலைகள் அல்லது மாநில நெடுஞ்சாலைகளுக்கு இது கண்டிப்பாக பொருந்தாது.

ஆகஸ்ட் 15 க்கு முன் ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் வாங்குவது எப்படி

படிப்படியான வழிகாட்டுதல்களை பாருங்கள்: ஃபாஸ்டேக் ஆண்டு பாஸை வாங்கும் முறை எளிதாக இருக்கிறது. முழுவதுமாக ஆன்லைனில் வாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான படிநிலைகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது பாருங்கள்.

அதிகாரபூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்

வாகன ஓட்டிகள் ராஜ்மார்க் யாத்ரா அப்ளிகேஷன் ( Rajmarg Yatra application ) அல்லது அதிகாரபூர்வ NHAI/MoRTH இணையதளம் மூலம் ஆண்டு பாஸை வாங்கலாம். இந்தத் தளங்களில் மட்டுமே வாங்க வேண்டும். இது ஃபாஸ்டேக் சேவைகளுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.

அதில் லாக் செய்யவும் அப்படியே வாகனம் மற்றும் ஃபாஸ்டேக் விவரங்களை உள்ளிட வேண்டும்

ராஜ்மார்க் யாத்ரா அப்ளிகேஷனில் வாகன ஓட்டிகள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் உள்நுழைய வேண்டும் அல்லது உள்நுழையாமல் இருந்தால் தங்கள் வாகன பதிவு எண் மற்றும் ஃபாஸ்டேக் ஐடியை நேரடியாக பதிவிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.

தகுதியைச் சரிபார்க்க வேண்டும்

3000 ஆண்டு பாஸ் வாங்குவதற்கு முன்பு ஃபாஸ்டேக் ஆக்டிவ்வாக உள்ளதா, சரியாக ஒட்டப்பட்டுள்ளதா மற்றும் சரியான வாகனப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். மேலும் உங்கள் ஃபாஸ்டேக் கருப்புப் பட்டியலில் இல்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

பணம் செலுத்த வேண்டும்

அடுத்ததாக உங்கள் தகுதி உறுதிசெய்யப்பட்ட பிறகு, நீங்கள் UPI, டெபிட்/கிரெடிட் கார்டுகள் அல்லது நெட் பேங்கிங் போன்ற பல கட்டண விருப்பங்களைப் பயன்படுத்தி ஆன்லைனில் ரூ. 3,000 செலுத்த வேண்டும்.

வருடாந்திர பாஸை இணைக்க வேண்டும்.

பணம் செலுத்துதல் வெற்றிகரமாக முடிந்தவுடன், ஆண்டு பாஸ் ஏற்கனவே உள்ள ஃபாஸ்டேக் கணக்கு மற்றும் வாகனப் பதிவுடன் இணைக்கப்பட்டுவிடும்


உறுதிப்படுத்துவது எப்படி

உங்கள் ஆண்டு பாஸ் வரும் ஆகஸ்ட் 15 முதல் செயல்படத் தொடங்கும் என்று உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் உறுதிப்படுத்தி அந்த தகவல் அனுப்பப்படும். அதை வைத்து உங்களுக்கு ஆண்டு பாஸ் கிடைத்துவிட்டது என்பதை உறுதி செய்யலாம். அதைபோல் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்.. நீங்கள் இன்று அல்லது நாளை என ஆகஸ்ட் 15க்கு முன்பு எந்த தேதியில் வாங்கினாலும், அது நடைமுறைக்கு வரும் தேதி ஆகஸ்ட் 15, 2025 தான்.

ரீசார்ஜ் எப்போது மீண்டும் செய்ய வேண்டும்

எனவே வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அமலுக்கு வருவதால், அடுத்த ஆண்டு (2026) ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முதல் நாள் வரை செயல்படும். எனவே மறுபடியும் வாங்க வேண்டும் என்றால் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன்பு வாங்கினால் போதும். தீர்ந்த பிறகு தான் வேலை செய்யும் என்பதால், அதற்கு முன்பே ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்ளலாம். அதேநேரம் பாஸ்படி 200 முறை சென்றுவிட்டால் காலாவதி ஆகிவிடும். எனவே மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டியதிருக்கும்.

ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் தகுதிக்கான நிபந்தனைகள் என்னென்ன

ஃபாஸ்டேக் ஆண்டு பாஸுக்கு தகுதியடைய சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியது கட்டாயம் ஆகும்.
அதன்படி ஆக்டிவ்வாக உள்ள ஃபாஸ்டேக்: வாகனத்தில் உள்ள தற்போதுள்ள ஃபாஸ்டேக் செயல்பாட்டில் இருக்க வேண்டும் . எந்தவொரு விதிமீறல்கள் அல்லது நிலுவைத் தொகைகள் காரணமாக கருப்புப் பட்டியலில் ஃபாஸ்டேக் சேர்க்கப்பட்டிருக்கக்கூடாது.

ஃபாஸ்டேக் வாகனத்தில் சரியாக ஒட்டப்பட்டிருக்க வேண்டும்

ஃபாஸ்டேக் வாகனத்தின் விண்டோஷீல்டில் சரியாக ஒட்டப்பட்டிருக்க வேண்டும், இதனால் சுங்கச்சாவடிகளில் எந்த சிக்கலும் இல்லாமல் எளிதாக நீங்கள் ஸ்கேன் செய்ய முடியும்.

வாகனப் பதிவுடன் இணைப்பது

வாகனப் பதிவு எண் (VRN) ஃபாஸ்டேக் கணக்குடன் சரியாக நீங்கள் இணைத்திருக்க வேண்டும். இந்த இணைப்பு சுங்கச்சாவடி வசூலின் போது சுமூகமான சரிபார்ப்புக்கு உதவும். எனவே அங்கு பாஸ்டேக் ஒர்க் ஆகவில்லை.. வாகன எண்ணுக்கு செட்டாகவில்லை என்று வாக்குவாதம் செய்ய வேண்டிய நிலை வராது.

தனியார் வாகனங்களுக்கான கட்டுப்பாடு

அதேநேரம் இந்த ஆண்டு பாஸ் வர்த்தக ரீதியற்ற, தனியார் வாகனங்களுக்கு மட்டுமே கிடைக்கும். வர்த்தக வாகனங்கள், லாரிகள் மற்றும் பேருந்துகள் இந்த ப்ரீபெய்ட் ஆண்டு பாஸுக்கு தகுதியற்றவை என்பதால், வர்த்தக வாகங்களை வைத்திருப்போர் பாஸை பயன்படுத்தவே முடியாது.

கருப்புப் பட்டியலில் இல்லாத நிலை

மோசடியான செயல்பாடு அல்லது விதிமீறல்கள் காரணமாக கருப்புப் பட்டியலில் உள்ள கணக்குகள் இந்த பாஸை என்றைக்குமே பெற முடியாது. இந்த நிபந்தனைகளின் படி ஆண்டு பாஸ் இருந்தால், உங்கள் வாகனம் தடையின்றி பயணிக்க முடியும்.

ஆகஸ்ட் 15 அன்று ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் செயல்படுத்தப்பட்ட பிறகு என்ன நடக்கும்?

வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அன்று ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ் செயல்படுத்தப்பட்ட பிறகு, ஒரு வருட செல்லுபடியாகும் காலத்திற்குள் தகுதியான நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் 200 முறை சுங்கச்சாவடிகளில் பயணிக்க வாகனங்களை அனுமதிப்பார்கள். ஒவ்வொரு முறையும் வாகனம் ஃபாஸ்டேக் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்ட சுங்கச்சாவடியைக் கடக்கும்போது, 200 பயணங்களின் எண்ணிக்கையிலிருந்து ஒரு சுங்கச்சாவடி பரிவர்த்தனை கழிக்கப்படும்.

இந்த பாஸ், பரிவர்த்தனை வரம்பு அல்லது செல்லுபடியாகும் காலம் அடையும் வரை கூடுதல் டாப்-அப்கள் அல்லது ரீசார்ஜ் செய்யத் தேவையில்லை.. பணமில்லாமல் சுங்கச்சாவடிகளை கடக்கலாம். ஆண்டு முடியும் வரை அல்லது 200 முறைக்கு மேல் போகும் போது, இதில் எது வந்தாலும் சாதாரண ஃபாஸ்டேக் பே-பர்-யூஸ் (pay-per-use) முறைக்கு மாறும். மேலும் நீங்கள்வழக்கமான நடைமுறைகளின்படி சுங்கச்சாவடி கட்டணங்களைச் செலுத்த வேண்டியதிருக்கும்.

ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ் என்பது சொந்த வாகனங்களில் அடிக்கடி பயணிப்பவர்களுக்கு அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் அசௌகரியத்தைக் குறைக்கவும், சுங்கச்சாவடி பரிவர்த்தனைகளை மென்மையாகச் செய்யவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எனவே சொந்த வாகனம் வைத்திருப்போருக்கு சுங்கச்சாவடிகள் தொல்லையாக இருக்காது

ஃபாஸ்டேக் ஆண்டு பாஸின் முக்கியமான நிபந்தனைகள் மற்றும் வரம்புகள்

ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ் பயன்பாட்டிற்கு சில நிபந்தனைகள் உள்ளன. இதை ஒரு முறை எடுத்த பிறகு மீண்டும் மாற்ற முடியாது. இந்த ஆண்டு பாஸ் ஃபாஸ்டேக் பதிவு செய்யப்பட்டு ஒட்டப்பட்டுள்ள குறிப்பிட்ட வாகனத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.வேறு வாகன எண்ணுக்கு பயன்படுத்த முடியாது.

இந்த ஆண்டு பாஸை திரும்பப்பெற முடியாதது: ஆண்டு பாஸுக்காக செலுத்தப்பட்ட தொகைகள் எந்த சூழ்நிலையிலும் திரும்பப்பெறப்படாது. ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் அவ்வளவு தான்.நீங்கள் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் கட்டணம் எந்த காரணம் கொண்டும் திரும்பத்தரப்படாது.

3000 பாஸில் இந்தியாவில் உள்ள எல்லா சுங்கச்சாவடிகளும் பயணிக்க முடியுமா

3000 பாஸில் இந்தியாவில் உள்ள எல்லா சுங்கச்சாவடிகளும் பயணிக்க முடியாது. இந்த பாஸ் தேசிய நெடுஞ்சாலைதுறையால் நிர்வகிக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இது மாநில நெடுஞ்சாலைகள், உள்ளூர் சாலைகள் அல்லது தனியார் சுங்கச்சாவடிளுக்கு பொருந்தாது.

ஆட்டோமேட்டிக் புதுப்பித்தல் இல்லை

காலாவதியான பிறகு, பயனர்கள் ப்ரீபெய்ட் வசதியை தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால், ஒரு புதிய ஆண்டு பாஸை மீண்டும் வாங்க வேண்டும்-

SMS நினைவூட்டல்கள்

வாகன ஓட்டிகள் தங்களிடம் மீதமுள்ள பயண வரம்புகளை (200ல் இருந்து ஒவ்வொன்றாக கழியுவதை) கண்காணிக்க பரிவர்த்தனைகள் மற்றும் பாஸ் பயன்பாட்டிற்கான அறிவிப்புகளை எஸ்எம்எஸ் ஆக பெறுவார்கள்.

ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ்: பொதுவான கேள்விகள்

ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் எப்போது கிடைக்கும்?

இந்தியாவின்சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, 2025 அன்று இது நடைமுறைக்கு வரும்.

இந்த பாஸுக்கு யார் தகுதியானவர்கள்?

செயலில் உள்ள ஃபாஸ்டேக், சரியான வாகனப் பதிவு எண் (VRN) உடன் இணைக்கப்பட்டு, கருப்புப் பட்டியலில் இல்லாத வர்த்தக ரீதியற்ற தனியார் வாகனங்கள் மட்டுமே தகுதியானவை ஆகும்.

ஆண்டு பாஸைப் பயன்படுத்த நான் ஒரு புதிய ஃபாஸ்டேக் வாங்க வேண்டுமா?

இல்லை. உங்கள் தற்போதைய ஃபாஸ்டேக் தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால், அதில் ஆண்டு பாஸை வாங்கலாம்

ஆண்டு பாஸை எங்கே மற்றும் எப்படி வாங்குவது

அதிகாரபூர்வ NHAI/MoRTH இணையதளங்கள் மூலம் வாங்கலாம். தகுதி சரிபார்ப்புக்குப் பிறகு, ஆன்லைனில் ரூ. 3,000 செலுத்தினால், இந்த பாஸ் பொதுவாக சில மணிநேரங்களுக்குள் ஆக்டிவேட் ஆகிவிடும்.

200 முறை பயணம் அல்லது ஒரு வருட செல்லுபடியாகும் காலம் முடிந்தவுடன் என்ன நடக்கும்?

உங்கள் ஃபாஸ்டேக் தானாகவே வழக்கமான ஃபாஸ்டேக் முறைக்கு மாறும். விரும்பினால் நீங்கள் மீண்டும் ஆண்டு பாஸை வாங்கலாம்.

ஆண்டு பாஸ் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடி மற்றும் சாலைகளிலும் பயணிக்கலமா

இல்லை. இது தேசிய நெடுஞ்சாலை மற்றும் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் விரைவுச் சாலை சுங்கச்சாவடிகளுக்கு மட்டுமே பொருந்தும். மாநில நெடுஞ்சாலைகள் அல்லது தனியார்கள்நிர்வகிக்கும் சுங்கச்சாவடிகள் ஒவ்வொரு பயணத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+