சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கூண்டில் அடைத்த போது விபரீதம்! வண்டலூர் பூங்காவில் பெண் சிறுத்தை உயிரிழப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூண்டில் அடைத்த போது பெண் சிறுத்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு விலங்குகள் ஆர்வலர்களை கவலைக் கொள்ளச் செய்துள்ளது.

Recommended Video

    கூண்டில் அடைத்த போது விபரீதம்! வண்டலூர் பூங்காவில் பெண் சிறுத்தை உயிரிழப்பு!

    கொரோனா பரிசோதனை செய்வதற்காக கூண்டில் அடைத்த போது கூண்டில் சிக்கிய பெண் சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

    ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு போன 4 மாஜிக்கள்.. ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு போன 4 மாஜிக்கள்..

    உயிரியல் பூங்கா ஊழியர்களின் கவனக்குறைபாட்டால் இந்த சம்பவம் நடைபெற்றதா என விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஆண் சிங்கம்

    ஆண் சிங்கம்

    கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வண்டலூர் பூங்கா மூடப்பட்டுள்ளது. தற்போது வனச்சரகர் மற்றும் ஊழியர்கள் உட்பட 76 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனிடையே கடந்த சனிக்கிழமை அன்று விஷ்ணு என்ற 4 வயது ஆண் சிங்கம் உணவுக் குழாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்தது.

    கொரோனா சோதனை

    கொரோனா சோதனை

    அதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பாதிப்பு உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்கள், புலிகள்,சிறுத்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பூங்காவில் உள்ள 18 வயதான ஜெயா என்ற பெண் சிறுத்தைக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டு அது கூண்டில் அடைக்கப்பட்டது.

    சோக நிகழ்வு

    சோக நிகழ்வு

    அப்போது எதிர்பாராத விதமாக கூண்டில் சிக்கிய அந்த பெண் சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த சிறுத்தைக்கு கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்தனர். கொரோனா இரண்டாம் அலையின்போது நீலா,கவிதா என்ற பெண் சிங்கங்கள் இறந்த நிலையில் விஷ்ணு என்ற ஆண் சிங்கம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இறந்தது. இந்தச் சூழலில் இந்த பெண் சிறுத்தை உயிரிழந்த சோகமான நிகழ்வும் அங்கு அரங்கேறியுள்ளது.

    ஆர்வலர்கள் கவலை

    ஆர்வலர்கள் கவலை

    இதனிடையே வண்டலூர் உயிரியல் பூங்காவில் அடுத்தடுத்து சிங்கமு, சிறுத்தையும் உயிரிழந்துள்ள சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்களை கவலைக் கொள்ளச் செய்திருக்கிறது. இனி வரும் நாட்களில் பூங்கா நிர்வாகத்தினர் மிகுந்த கவனத்தோடு வன உயிரினங்களை கையாளவேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    English summary
    Female leopard death at Vandalur zoo
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X