சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம்.. மாணவர்கள் எதிர்காலம்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் நடப்பாண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட தாமதிப்பதால் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா பொதுமுடக்கமும், அதுசார்ந்த பின்விளைவுகளும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் படிப்பை வெகுவாக பாதித்துள்ளன. பொதுமுடக்கத்தால் ஆன்லைன் வகுப்புக்கு மாறிய மாணவர்களின் கற்றல் திறன் பாதியாக குறைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றிருந்தாலும், தொழில் திறன் குறைந்த மாணவர்களே கல்வி சாலைகளில் இருந்து வெளிவந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இதுபோன்ற மாணவர்களை 'கொரோனா பேட்ச்' எனக் கூறி அவர்களை வேலைக்கு எடுக்க பல முன்னணி நிறுவனங்கள் தயங்கி வருகின்றன.

தற்போதுதான் கொரோனா அச்சம் விலகி பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது.

சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு - புதிய தேதி அறிவிப்பு சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு - புதிய தேதி அறிவிப்பு

செமஸ்டர் தேர்வுகள்

செமஸ்டர் தேர்வுகள்

இந்த சூழலில், தமிழகத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் மற்றும் அவை சார்ந்த கல்லூரிகள் தங்கள் மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை இன்னும் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்தப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களால் உயர் படிப்புக்கும் விண்ணிப்பிக்க முடியாத நிலையும், வேலைக்கு சேர முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவை மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை இன்னும் வெளியிடவில்லை.

மாணவர் சேர்க்கை

மாணவர் சேர்க்கை

அதே சமயத்தில், தமிழகத்தில் உள்ள தன்னாட்சி பல்கலைக்கழகங்கள் கடந்த மாதமே இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டுவிட்டன. இதனால் இந்தப் பல்கலைக்கழகங்களில் படித்த மாணவர்கள் இன்று பல நிறுவனங்களில் பணிக்கே சேர்ந்துவிட்டனர். இதேபோல, சில அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் சில பல்கலைக்கழகங்கள் 5-வது செமஸ்டர் தேர்வு மதிப்பெண்ணின் அடிப்படையில் உயர்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை தொடங்கிவிட்டன.

கேம்பஸ் இன்டர்வியூ செலக்ஷன்

கேம்பஸ் இன்டர்வியூ செலக்ஷன்

இதன் காரணமாக, மேலே குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர் படிப்பிலும் சேர முடியாமல், பணியிலும் சேர முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இதுகுறித்து மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்த மாணவர் அர்ஜுன் கூறுகையில், "கல்லூரியில் கடந்த ஆண்டு நடைபெற்ற கேம்பஸ் இண்டர்வியூவில் முன்னணி நிறுவனம் ஒன்றில் தேர்வாகி விட்டேன். ஆனால் எங்கள் பல்கலைக்கழகம் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிடாததால் என்னால் வேலைக்கு சேர முடியவில்லை. இதனால் அந்த வேலையை இழந்துவிடுவேனோ என பயமாக உள்ளது" என்றார்.

 உயர் படிப்பு

உயர் படிப்பு

இதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷணா கூறும்போது, "பல கல்லூரிகள் 5-வது செமஸ்டர் தேர்வு முடிவுகளை வைத்து மாணவர் சேர்க்கையை தொடங்கிவிட்டன. கொரோனா காரணமாக 5-வது செமஸ்டரில் இரண்டு தேர்வுகளை என்னால் எழுத முடியவில்லை. இறுதி செமஸ்டரில்தான் அந்த தேர்வுகளை எழுதினேன். என்னை போல ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருப்பார்கள். அவர்களால் எப்படி உயர்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்? எனவே, உயர்படிப்பு சேர்க்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் ஒரேமாதிரியான விதிமுறையை பின்பற்ற அரசு உத்தரவிட வேண்டும்" என அவர் கூறினார்.

 மதுரை காமராஜ் பல்கலை. விளக்கம்

மதுரை காமராஜ் பல்கலை. விளக்கம்

இதுகுறித்து மதுரை காமராஜ் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் தர்மராஜ் கூறுகையில், "கொரோனா சூழல் காரணமாக இறுதி செமஸ்டர் தாமதமாகவே நடைபெற்றது. ஏப்ரலில் நடைபெற வேண்டிய தேர்வுகள் ஜூலை மாதம்தான் நடைபெற்றது. எனவேதான், தேர்வு முடிவுகளை வெளியிட தாமதமாகிறது. அடுத்த மாதம் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகிவிடும். அமாணவர் சேர்க்கையை நிறைவு செய்ய அக்டோபர் 31-ம் தேதி வரை யுஜிசி அவகாசம் அளித்துள்ளது. இதனால் உயர்படிப்புகளில் சேர மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படாது" என்றார்.

English summary
Prominent Universities in Tamil Nadu delaying the process of releasing final semester exam results.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X