பெருமை பேசும் போலீஸ்.. மத்திய சிறையிலிருந்து தப்பிய 5 கைதிகள்! இதுவரை சிக்கலையே! வெளியான பகீர் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேனி தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி சென்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 36 மணி நேரத்திற்குள் அவர்களை கைது செய்து விட்டோம் என காவல்துறை பெருமை பேசியது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மிக பாதுகாப்பு மிகுந்த மத்திய சிறைகளில் இருந்து இதுவரை 5பேர் தப்பித்து தலைமறைவாக இருப்பதும் அவர்கள் அனைவருமே இதுவரை கைது செய்யப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் பரோலில் சென்று தலைமறைவானோர் எண்ணிக்கை 13 என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுமட்டுல்லாமல் ஜாமீனில் சென்று தலைமறைவானோர் எண்ணிக்கை பல நூறு இருக்கும் என்கின்றனர்.

கடந்த வாரம் திங்கட்கிழமை தேனியில் உள்ள மாவட்ட சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிறையில் இருந்த கைதிக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறி காவலர்களை தாக்கி விட்டு அந்த கும்பல் தப்பியது.

Central Prison police tn govt

தொடர்ந்து தேனி மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்ட நிலையில் தப்பியோடிய கைதிகள் அனைவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். 36 மணிநேரத்திற்குள் கைதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கை அளித்தது.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள சிறைச் சாலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், சிறைகளை ஆய்வு செய்து கூடுதலாக என்ன செய்ய வேண்டும் என பரிந்துரைக்க முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தேனி மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறை கைதிகள் தப்பியோடியுள்ளார்.

குறிப்பாக மிக பாதுகாப்பு இருக்கும் மத்திய சிறைகளில் இருந்து தப்பியவர்களை இதுவரை பிடிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி மத்திய சிறையில் இருந்து ராஜா, சேலம் மத்திய சிறையில் இருந்து லட்சுமணன், பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து குருசாமி, கடலூர் மத்திய சிறையில் இருந்து விநாயகமூர்த்தி - அய்யனார் ஆகியோர் தப்பிச் சென்று பல மாதங்கள் ஆகிவிட்டது.

இந்த நிலையில் இன்று வரை அவர்கள் கைது செய்யப்படவில்லை. அது மட்டும் அல்லாமல் சிறை விடுப்பு எனப்படும் பொருளில் சென்று தலைமறைவானது எண்ணிக்கை மட்டும் பத்திரிகையாளரான அரவிந்த் அக்சன். அதுமட்டுமல்லாது தமிழகம் முழுவதும் நேற்றைய நிலவரப்படி 23 ஆயிரத்து 63 சிறைவாசிகள் சிறையில் உள்ளன.

நேற்று ஒரே நாளில் 86 பேர் சிறைக்குள் அடைக்கப்பட்டதோடு விடுதலை ஆனவர்களின் எண்ணிக்கை 292 என்றும் கூறியுள்ளார். இது ஒருபுறம் இருக்க ஜாமீன் பெற்று வெளியில் சென்று மீண்டும் ஆஜராகாதவர்கள் எண்ணிக்கை பல நூறைத் தாண்டும் என்கின்றனர். தமிழகத்தில் தற்போது கிளைச்சிறை, மாவட்ட சிறை, மத்திய சிறைகள் என, 142 சிறைகள் இருக்கும் நிலையில் அவற்றை ஆய்வு செய்து பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்த பரிந்துரைகளை தருவது திரிபாதிக்கு கொஞ்சம் சவாலான காரியமாக தான் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+