டிடிவி தினகரனுடன் அண்ணாமலை திடீர் மீட்டிங்.. உன்னிப்பாக கவனிக்கும் அதிமுக! ஆலோசித்தது என்ன?
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பானது நடந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையுமாறு அண்ணாமலை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் கூட்டணியில் நான் இருக்க மாட்டேன் என டிடிவி தினகரன் கூறியிருந்த நிலையில் அண்ணாமலை சந்தித்து பேசி இருக்கிறார்.

கடந்த லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த டிடிவி தினகரன், அண்மையில் அந்தக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளாரக ஏற்க முடியாது என்றும், அவர் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரையில் கூட்டணிக்கு திரும்ப மாட்டேன் என்றும் டிடிவி தினகரன் கூறியிருந்தார்.
மேலும், தமிழக பாஜகவின் தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரனையும் விமர்சித்த டிடிவி தினகரன், அண்ணாமலையை பாராட்டி பேசினார். அண்னாமலை பாஜக தலைவராக இருந்தவரை எல்லாம் சரியாக சென்றது என்றும் டிடிவி தினகரன் கூறியிருந்தார். மேலும், அண்ணாமலையிடம் அவ்வப்போது பேசி வருவதாகவும் டிடிவி தினகரன் கூறினார்.
டிடிவி தினகரன் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அண்ணாமலையும் வலியுறுத்தியிருந்தார். இந்த சூழலில் டிடிவி தினகரனை அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அண்ணாமலை - டிடிவி தினகரன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களும் பரபரப்புக்கும் வித்திட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை நேற்று நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசியிருந்தார். எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்த பிறகு நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமி இடையே நடைபெற்ற சந்திப்பு முக்கியத்துவம் பெற்று இருந்தது. இத்தகைய சூழலில்தான் அண்ணாமலை டிடிவி தினகரன் சந்தித்து பேசியிருக்கிறார்.
-
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
அண்ணாமலை+ராகவா லாரன்ஸ்+விசாகன்! இது புது காம்பினேஷனா இருக்கே! ரெடியாகும் மாஜி ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆபீசர்ஸ் -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications