சென்னை இண்டிகோ விமானத்தில் ஏறிய மாஜி அமைச்சரை நெகிழ வைத்த மகள்.. பைலட்டாக இருந்தது யாரு பாருங்க
சென்னை: சென்னையில் இருந்து கோவாவிற்கு இண்டிகோ விமானத்தில் பயணித்த கோவாவின் மாஜி அமைச்சர் தீபக் தவாலிகருக்கு பெரிய சர்ப்ரைஸ் காத்திருந்தது. ஏனென்றால் அந்த விமானத்தின் துணை விமானியாக அவரது மகள் கவுரி தவாலிகர் தான் இருந்தார். முதல் முறையாக தனது விமானத்தில் தந்தை பயணிப்பதாக கூறி அந்த துணை விமானி கவுரி தவாலிகர் பூரித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
கோவாவை சேர்ந்த அரசியல்வாதி தீபக் தவாலிகர். இவர் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் தலைவராக உள்ளார். கோவாவில் இருந்து 1961ம் ஆண்டில் போர்த்துகீசியர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு அங்கு ஆட்சியை பிடித்த முதல் கட்சி இதுவாகும்.

தீபக் தாவலிகர் கடந்த 2007 ம் ஆண்டு 2017 ம் ஆண்டு வரை பிரியால் சட்டசபை தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தார். மறைந்த கோவா முன்னாள் முதல்வர் மனோகர் லால் பாரிக்கர் அரசில் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை அமைச்சராகவும் செயல்பட்டு வந்தார்.
கடந்த 2022ம் ஆண்டு தேர்தலில் பாஜக வேட்பாளர் கோவிந்திடம் 213 ஓட்டுகள் வித்தியாசத்தில் தீபக் தவாலிகர் தோல்வியடைந்தார். இவர் சென்னையில் இருந்து கோவாவிற்கு இண்டிகோ விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தார். சென்னை விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் தீபக் தவாலிகர் ஏறி பயணிகளுடன் பயணியாக அமர்ந்து இருந்தார். அந்த விமானத்தில் ஃபர்ஸ்ட் ஆபிஸராக (துணை விமானி) கவுரி தவாலிகர் இருந்தார்.
இவர் யார் என்றால் தீபக் தவாலிகரின் மகள் ஆவார். தான் இயக்கும் விமானத்தில் தந்தை தீபக் தவாலிகர் முதல் முறையாக அமர்ந்து இருப்பதை நினைத்து கவுரி தவாலிகர் பூரிப்படைந்தார். மேலும் கவுரி தவாலிகர் விமான பயணிகளுக்கு மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் தனது தந்தையை தீபக் தபாலிகரை அறிமுகம் செய்து வைத்து வரவேற்றார். இதுதொடர்பாக கவுரி தவாலிகர் பேசியதாவது: ‛‛என் பெயர் கவுரி தவாலிகர். ஃபர்ஸ்ட் ஆபிஸராக இருக்கிறேன். இண்டிகோ விமானத்துக்கு வந்துள்ள பயணிகள் அனைவரையும் வரவேற்கிறேன்.
உங்களை போல் என் தந்தையும் இந்த விமானத்தில் பயணிக்க வைத்துள்ளது. இந்த விமானத்தில் முதல் முறையாக உங்களுடன் என் தந்தையும் பயணிக்கிறேன். ஒரு பைலட்டாக முதல் முறையாக அவரை விமானத்தில் கோவாவிற்கு அழைத்து செல்கிறேன். இது எனக்கு சிறப்பு வாய்ந்த பயணமாக இருக்கிறது.
இந்த வேளையில் எனது தந்தைக்கு ஸ்பெஷல் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் தந்தை தான் இந்த உலகத்தில் எனது கனவுகளை மெய்ப்பட வைத்த நபர்.. தேங்க் யூ அப்பா'' என்று கூறினார். இதை கேட்டவுடன் சக பயணிகள் கைகளை தட்டி ஆரவாரம் செய்து தந்தை தீபக் தவாலிகர் மற்றும் துணை விமானி கவுரி தவாலிகரை பாராட்டு தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications