கிடப்பில் ஃபைல்கள்! இந்த ஆளுநர் மட்டுமல்ல எந்த ஆளுநரும் நமக்கு வேண்டாம்! நீதியரசர் சந்துரு அதிரடி!
சென்னை : பல்வேறு விவகாரங்களில் அதிகார துஷ்பிரயோகம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மட்டுமல்ல எந்த ஆளுநரும் நமக்கு வேண்டாம் என்ற முடிவுக்கு நாம் விரைவில் தள்ளப்படுவோம் என முன்னாள் நீதி அரசர் சந்துரு கூறியிருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கம் விழா தொடர்பான நிகழ்ச்சியில் பேசி ஆளுநர் தமிழ்நாட்டை தமிழகம் என்பது அழைப்பது சரியாக இருக்கும் என கூறியதாக குற்றம் சாட்டி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடுமையான கண்டனங்களை முன்வைத்தன.
ஏற்கனவே ஆளுநரை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் இந்த விவகாரம் தமிழக முழுவதும் பலத்த கண்டனங்களை பெற்றது. மேலும் ஆளுநருக்கு தமிழக சட்டசபையிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது..

ஆளுநர் விளக்கம்
இந்நிலையில் எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வது தவறானது மற்றும் யதார்த்ததுக்கு புறம்பானது என ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,""2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த "காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்' ஒரு மாத காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி' நடைபெற்றது.

'தமிழகம்'
அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, 'தமிழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் 'தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், 'தமிழகம்' என்பதை 'மிகவும் பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

தவறானது
கண்ணோட்டத்தை 'தமிழ்நாட்டின் பெயரை எனது மாற்றுவதற்கான பரிந்துரை போல' பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்." எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை' எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்" எனக் கூறப்பட்டுள்ளது.

நீதியரசர் சந்துரு
இந்நிலையில், எந்த ஆளுநரும் நமக்கு வேண்டாம் என்ற முடிவுக்கு நாம் தள்ளப்படுவோம் என நீதியரசர் சந்துரு கூறியிருக்கிறார். அரசியல் அமைப்புச் சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும் என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர்,"ஆன்லைன் சூதாட்ட தடை செய்ய இயற்றப்பட்ட அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் அதனை சட்டமாக நிறைவேற்றும் மசோதாவுக்கு ஒப்புதல் தர மறுக்கிறார். சூதாட்ட நிறுவனம் முதலாளிகளுக்கு ஆளுநர் தேனீர் விருந்து அளித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆளுநர் மட்டுமல்ல எந்த ஆளுநரும் நமக்கு வேண்டாம் என்ற முடிவுக்கு நாம் விரைவில் தள்ளப்படுவோம்" என பேசினார்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரா? அமைச்சர் விஸ்வநாதன் மீது பொன்முடி விமர்சனம் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications