என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன்! ஜாலியாக இருக்கும் விஜயபாஸ்கர்! என்ன காரணம் தெரியுமா?
சென்னை : மற்ற அமைச்சர்கள் எல்லாம் சோதனை குறித்து பதட்டத்தில் இருக்கும் நிலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான விஜயபாஸ்கர் மட்டும் இவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்வதற்கு காரணம் என்ன? என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றிய போது அதிக விலை கொடுத்து எல்இடி விளக்குகளை வாங்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் சென்னை கோவை உட்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை முதல் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், அவரது ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்

கடும் கொந்தளிப்பு
தமிழகம் முழவதும் நடத்தப்பட்ட சோதனையில் அதிமுகவில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில், கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்பான சோதனையில் ₹32.08 லட்சம் ரொக்கம், 1,228 கிராம் தங்கம், 348 கிராம் வெள்ளி மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்களும் கண்டறியப்பட்டன. வழக்கில் தொடர்புடைய 315 ஆவணங்கள், 2 வங்கி பெட்டக சாவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன என லஞ்ச ஒழிப்புத்துறை கூறியது.

சி.விஜயபாஸ்கர்
இதேபோல் புதுக்கோட்டையில் மருத்துவக்கல்லூரி விவகாரம் தொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்பான சோதனையில் ₹18.37 லட்சம் பணம், 1,872 கிராம் தங்கம், 8.28 கிலோ வெள்ளி கண்டறியப்பட்டன. வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள், 1 சிடி, 1 பென்டிரைவ், 2 ஐபோன்கள், 4 வங்கி பெட்டக சாவிகள் கண்டறியப்பட்டுள்ளன என கூறப்படுகிறது. ஆனால் தங்கள் வீடுகளில் இருந்து எதுவுமே கைப்பற்றப்படவில்லை என முன்னாள் அமைச்சர்கள் தரப்பு கூறுகிறது.

ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை
இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை எனவும், குற்றச்சாட்டுகள் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி கூறியிருந்தார். இதேபோல் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர் மற்ற அமைச்சர்கள் போல ஆவேசமாகவோ கோபமாகவோ பேசாமல் சிரித்த முகத்துடன் இடையே செய்தியாளர்களை சந்தித்தார்.

2 செல்போன்கள் மட்டும் தான்
அப்போது பேசியவர் என் அப்பார்ட்மெண்டில் சுமார் 12 மணி நேரம் சோதனை செய்தார்கள். திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சோதனை நடைபெற்றிருக்கிறது. ஏற்கனவே நான் பல சோதனைகளை எதிர்கொண்டேன். இப்போது இது இரண்டாவது முறை. என் வீட்டில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக டிவியில் சொல்கிறார்கள் ஆனால் எனக்கு எழுதிக் கொடுத்த கடிதத்தில் இரண்டு செல்போன்களைத் தவிர வேறு எதுவும் கைப்பற்றப்படவில்லை. என் மகள் கூட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அடுத்து எப்போது ரெய்டுக்கு வருவார்கள் என கேட்கிறார். என் மீது எந்த வழக்கு போட்டாலும் நாங்கள் எதிர்கொள்ள தயார்" என சிரித்துக் கொண்டே பேசினார்.

என்ன காரணம்
மற்ற அமைச்சர்கள் எல்லாம் சோதனை குறித்து பதட்டத்தில் இருக்கும் நிலையில் விஜயபாஸ்கர் மட்டும் இவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்வதற்கு காரணம் என்ன என புதுக்கோட்டை தரப்பு ஆதரவாளர் இடம் பேசிய போது ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதை தேர்தலின் போதே தெரிந்து வைத்திருந்த விஜயபாஸ்கர் தனது வீட்டில் இருந்த தேவையற்ற ஆவணங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தி விட்டார். மேலும் தற்போது நடந்திருக்கும் சோதனை தன்னைக் குறிவைத்து நடத்தப்பட்டது அல்ல. பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் மருத்துவக் கல்லூரிகளையும் நடத்தி வரும் 'முதலாளி' ஒருவரை குறி வைத்து நடத்தப்பட்டதால் தனக்கு கவலையில்லை எனவும், மேலும் இந்த சோதனையின் போது ஆவணங்கள் எதுவுமே கைப்பற்றப்படவில்லை என்பதால் தான் விஜயபாஸ்கர் எவ்வித பதட்டமும் இன்றி பேசியதாக கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications