ரெண்டு பாட்டு பாடுங்க.. வெயிலில் மயங்கிய ‘ 4 தலைகள்’! தொண்டர்களுக்கு 'பூஸ்ட்' கொடுத்த ஜெயக்குமார்!
சென்னை : சென்னயில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கடுமையான வெயில் காரணமாக சோர்வடைந்த அதிமுக தொண்டர்களை எம்ஜிஆர் பாடல் பாடி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உற்சாகமூட்டிய நிலையில், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் "இன்னும் ரெண்டு பாட்டு பாடுங்க, நல்லாத்தான் இருக்கு" என்று கூற மேடையில் சிரிப்பலை ஏற்பட்டது.
மின் கட்டண உயர்வு, ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 2 கட்டமாக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், 3வது கட்டமாக அதிமுக சென்னை மாவட்ட கழகங்கள் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, சரியாக காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு மணி நேரம் தாமதமாகத் தான் தொடங்கியது. இதனால் காலை 8 மணியிலிருந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து காத்திருந்த தொண்டர்கள் ஆங்காங்கே சோர்வாக அமர்ந்து விட்டனர்.
Recommended Video

மயக்கம்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி மட்டும் மயக்கமடையவில்லை. மேடை அமைக்கப்பட்டிருந்த இடத்தில் நேராக வெயில் அடித்த நிலையில், முன்னாள் அமைச்சர் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் பொன்னையன், சசிரேகா மற்றும் தொண்டர்களும் மயக்கமடைந்தனர்.

ஜெயக்குமார்
அப்போது கூட்டம் ஆரம்பிக்காததால் சில தொண்டர்கள் மரத்தடிகளில் தஞ்சம் அடைந்த நிலையில், சிலர் அங்கிருந்து நைசாக நடையை கட்ட தொடங்கினர். இதனை கண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேடையில் ஏறி ஸ்பீக்கர்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டு பாடல்களை நிறுத்திவிட்டு மைக் பிடித்து தன் சொந்த குரலில் எம்ஜிஆர் பாடல்களை பாட ஆரம்பித்தார்.

சிரிப்பலை
இதனால் உற்சாகமான நிர்வாகிகள் மேடையில் கைதட்டி ரசிக்க கீழே இருந்த தொண்டர்களும் விசில் அடித்து ஆர்ப்பரித்தனர். இரண்டு பாடல்களை மூச்சு முட்ட பாடி முடித்து ஜெயக்குமார், மீண்டும் ஸ்பீக்கர்களை ஆன் செய்து பாடல்களை ஒளிபரப்ப கூற... அவரை இடைமறித்த அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் "இன்னும் ரெண்டு பாட்டு பாடுங்க, நல்லாத்தான் இருக்கு" என்று கூற மேடையில் சிரிப்பலை ஏற்பட்டது.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications