புழல் சிறையில் இருந்து விடுதலையானார் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் - அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையில் இருந்து இன்று வெளியே வந்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தொண்டரை தாக்கியது, தேர்தல் விதிமுறை மீறி சாலை மறியல் செய்தது, நில அபகரிப்பு ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் அளித்ததை அடுத்து அவர் இன்று காலை புழல் சிறையில் இருந்து விடுதலையானார் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Recommended Video

    D Jayakumar Released on Conditional Bail | Oneindia Tamil

    பிப்ரவரி 19ஆம் தேதி நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில் சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுகவைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கினார். அரைநிர்வாணமாக்கி தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் பிப்ரவரி 20ஆம் தேதி ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து, கடும் நிபந்தனையுடன் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் போலீஸில் இரு வாரங்கள் புதன், வெள்ளிகிழமைகளில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

    நில அபகரிப்பு வழக்கு

    நில அபகரிப்பு வழக்கு

    கொரோனா விதிமுறைகளை மீறி போராட்டம் நடத்தியது, திமுக பிரமுகரை தாக்கியது ஆகிய வழக்குகளில் ஜெயக்குமாருக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவர் அந்த வழக்குகளில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்றாவதாக நில அபகரிப்பு வழக்கு போடப்பட்டு மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.

    3வது வழக்கில் நிபந்தனை ஜாமின்

    3வது வழக்கில் நிபந்தனை ஜாமின்

    நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தல் அவர் மனு தாக்கல் செய்தார்.

    முன்னாள் அமைச்சரான தனது நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் நோக்குடன் பதிவான வழக்கில் கைதசெய்யப்பட்டு உள்ளாதால், ஜாமின் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

    காவல்துறை எதிர்ப்பு

    காவல்துறை எதிர்ப்பு

    இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. அதேசமயம் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என புகார்தாரர் மகேஷ்குமார் தரப்பில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோகுல், கடந்த ஆட்சி அதிமுக ஆட்சி என்பதால் சரியாக விசாரிக்க வில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் சட்டத்தை கையிலெடுத்துக்கொண்டார் என்றும் எனவே ஜாமீன் வழங்க கூடாது என்று எடுத்துப் எதிர்ப்பு தெரிவித்தார்.

    திருச்சியில் தங்கி கையெழுத்திட உத்தரவு

    திருச்சியில் தங்கி கையெழுத்திட உத்தரவு

    புகார்தாரர் தரப்பிலும் ஜாமின் வழங்கி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் அவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தங்கி இருக்க வேண்டும் அங்கு உள்ள காவல் நிலைத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் கையெழுத்து போட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மூன்று வழக்குகளிலும் ஜெயக்குமாருக்கு ஜாமின் கிடைத்துள்ளதால் அவர் நேற்றைய தினம் சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஜெயக்குமார் விடுதலை

    ஜெயக்குமார் விடுதலை

    இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையானார். அவரை தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். விடுதலையான ஜெயக்குமார் அரசுக்கு எதிராக முழக்கமிட்டார். தன் மீது பொய் வழக்குகள் போட்டு கைது செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். முதல்வர் மு.க. ஸ்டாலின் ஹிட்லர், முசோலினி போல நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+