சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

“கருணாநிதி சாலை”.. தமிழ்நாடு ”கருணாநிதி நாடு”னு கூட மாறலாம்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

Google Oneindia Tamil News

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை கருணாநிதி சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சாலையின் பெயர் மாற்றப்படுவதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள் எனவும், விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என மாற்றினாலும் மாற்றிவிடுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் நெடுஞ்சாலைத் துறையின் பவள விழா நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நெடுஞ்சாலைத்துறை சாதனைகள் மற்றும் கிடைக்கும் பெருமைகளுக்கு கருணாநிதி தான் காரணம் என்றார்.

வெயில் சுட்டெரித்தாலும் 5 நாட்களுக்கு ஜில் மழை இருக்காம் - வானிலை மையத்தின் கூல் அறிவிப்பு வெயில் சுட்டெரித்தாலும் 5 நாட்களுக்கு ஜில் மழை இருக்காம் - வானிலை மையத்தின் கூல் அறிவிப்பு

மேலும் அந்த துறைக்கு அவர் செய்த சாதனைகள் காரணமாக, சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை இருக்கக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை இனி, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என பெயர் சூட்டப்படும் என்றார்.

கருணாநிதி சாலை

கருணாநிதி சாலை

தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், ஒருபுறம் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை கருணாநிதி சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சாலையின் பெயர் மாற்றப்படுவதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள் எனவும், விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என மாற்றினாலும் மாற்றிவிடுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஜெயக்குமார் விமர்சனம்

ஜெயக்குமார் விமர்சனம்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரை சூட்டுவதை கொச்சைப்படுத்த விரும்பவில்லை . காஷ்மீரில் இருப்பவர்களுக்கு கூட ஈசிஆர் என்றால் தெரியும். அந்த அளவுக்கு இந்தியா முழுவதும் பிரசித்திபெற்ற சாலை. அந்த சாலையின் பெயர் மாற்றப்படுவதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள். விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என மாற்றினாலும் மாற்றிவிடுவார்கள் .

அதிமுக - திமுக

அதிமுக - திமுக

அம்மா உணவகத்தை குறைத்து கருணாநிதி உணவகத்தை அதிகப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகிறது. அதிமுக எனக்கு என்ன பண்ணி கொடுத்தாலும் நான் சிறப்பாக செய்வேன். அதிமுகவில் கட்சிக் கொடி கட்டுபவன் கூட முதல்வராக முடியும். ஆனால் திமுகவில் நேரு, பொன்முடி போன்றவர் ஸ்டாலினுக்கு அடுத்து வர முடியுமா ? திமுகவில் அது போன்ற நிலைமை இருக்கிறதா. தமிழக மக்கள் திமுக மீது வெறுப்பில் உள்ளனர். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்னை உள்ளது. மக்கள் கொதித்து போய் உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை மக்கள் எங்களுக்கு கொடுப்பார்கள். தமிழ் நமது ஆட்சி மொழியாக உள்ளது. ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது. திமுக மும்மொழி கொள்கையை நேரடியாக ஆதரிக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை தான். அதிமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் மறு விசாரணை நடத்த எந்த பிரச்சினையும் இல்லை. மடியில் கனம் உள்ளவர்களுக்கு தான் பயம் இருக்கும்." என தெரிவித்தார்.

English summary
Chennai East Coast Road has been renamed as Karunanidhi Road, meanwhile former minister Jayakumar has said that Tamil Nadu will soon be renamed as Karunanidhi Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X