சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரேடாரில் சிக்கும் பினாமிகள்.. விரைவில் சாட்டையை சுழற்ற ரெடியான முதல்வர்.. 8 பேருக்குத்தான் குறி!

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சிலரும் பினாமிகளை தமிழக அரசு கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கொரோனாவிற்கு பின் நடக்க உள்ள பல்வேறு ஊழல், முறைகேடு தொடர்பாக விசாரணைக்காக இந்த கண்காணிப்பு நடந்து வருவதாக கூறுகிறார்கள்.

Recommended Video

    தமிழக அமைச்சரவையில் நிகழப்போகும் மாற்றம்.. ஏற்கனவே முடிவெடுத்துவிட்ட முதல்வர் Stalin ?

    தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்றபின் முழுக்க முழுக்க கொரோனா தடுப்பு பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. கொரோனா பரவல் தடுப்பில் மட்டுமே எல்லா அமைச்சர்களும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்த பின் தமிழக அரசு மற்ற நடவடிக்கைகள், நலத்திட்டங்களில் கவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது. அதில் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீதான ஊழல் புகார்கள் மீதான விசாரணையும் ஒன்றாக இருக்கும் என்கிறார்கள்.

    சசிகலா வாங்கிய மேலும் ரூ.300 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகள் முடக்கம்! சசிகலா வாங்கிய மேலும் ரூ.300 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகள் முடக்கம்!

    என்ன சொல்கிறார்

    என்ன சொல்கிறார்

    இது தொடர்பாக அரசு வட்டாரத்தில் விசாரித்ததில்.. கொரோனா காலம் என்பதால் அரசு வேறு எந்த விஷயம் மீதும் கவனம் செலுத்தவில்லை. ஆனால் கொரோனாவிற்கு பின் யார் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கலாம் என்று லிஸ்ட் ஏற்கனவே ரெடியாகிவிட்டது. ஊரடங்கு காலத்திற்கு பின் ஒவ்வொருவராக விசாரிக்கப்படுவார்கள். பொறுத்திருந்து பாருங்கள், என்று கூறுகிறார்கள்.

    பினாமிகள்

    பினாமிகள்

    அதன்படி முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிலரின் ஒப்பந்தங்கள், நிதி ஒதுக்கீடுகளை விசாரிக்கும் முடிவில் அரசு இருப்பதாக கூறுகிறார்கள். இவர்கள் செய்த ஒப்பந்தங்கள், ஒதுக்கிய டென்டர்கள் அனைத்தையும் லிஸ்ட் எடுத்து ஒவ்வொன்றாக விசாரிக்க போவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் முன்னாள் அமைச்சர்களின் பினாமிகளையும் விசாரிக்க உள்ளனராம்.

    மாஜிக்கள்

    மாஜிக்கள்

    மாஜி அமைச்சர்களின் பினாமிகளை விசாரிக்கும் முடிவில் தமிழக அரசு இருப்பதாகவும், 8 பினாமிகள் ஏற்கனவே ரேடாரில் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆட்சிக்கு வந்த போது நிறைய நிதி முறைகள் கண்டுபிடிக்கப்பட்டது.. ஒவ்வொரு துறையிலும் பெரிய ஓட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா நிர்வாகத்திலும் முறைகேடுகள் நடந்துள்ளது.. இதைத்தான் அரசு விசாரிக்க போகிறது என்கிறார்கள்.

    ஒப்பந்தம்

    ஒப்பந்தம்

    முக்கியமாக ஆட்சிக்கு வந்த முதல் வாரம் நிதி நிலையை ஆய்வு செய்ததில் பல முறைகளை திமுக அரசு கண்டுபிடித்துள்ளது. இதனால் கண்டிப்பாக ஒவ்வொரு முறைகேடும் விரிவாக விசாரிக்கப்படும் என்கிறார்கள். பழிவாங்கும் நடவடிக்கை போல இருக்க கூடாது.. தவறு செய்தவர்களை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்ற முடிவில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்.

    ஆனால்

    ஆனால்

    இதனால்தான் அரசுக்கு இப்போதே சிலர் தூது விடுகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் சிலர் தங்கள் தொகுதி திமுக நிர்வாகிகள் மூலம் சமாதானம் பேச தூது விடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் திமுக அரசோ இந்த தூதுகளை கண்டுகொள்ளவில்லை.. தப்பு செய்தது யாராக இருந்தாலும் விசாரிப்போம் என்ற முடிவில் இருக்கிறதாம்.. கொரோனா முடிந்ததும் கேம் ஸ்டார்ட் ஆகும் என்கிறார்கள்.

    English summary
    Former ministers Benami's may get into trouble soon as TN govt may start an investigation on various scams.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X