சீனியர் சிட்டிசன்களுக்கு குட் நியூஸ்.. இலவச பஸ் பயணத்துக்கு டோக்கன்கள் இன்றுமுதல் விநியோகம்
சென்னை: மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பேருந்து பயணம் செய்யும் வகையில் சூப்பர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன. எந்தெந்த பகுதிகளில் இந்த டோக்கன்கள் வழங்கப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
மூத்த குடிமக்களுக்கான பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றன. வங்கிகள், கோவில் சிறப்பு தரிசனம், பேருந்து பயணம், ரயில் பயணம், ஓய்வூதியம், தபால் நிலைய சேவைகள், ரேஷன் கடைகள் என அனைத்திலும் சிறப்பு சலுகைகள் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மூத்த குடிமக்கள் இலவசமாக பேருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 6 மாதங்களுக்கு மூத்த குடிமக்கள் பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்வதற்கான டோக்கன் வழங்கப்படவுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் இன்று (ஜூன் 21) முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும்.

இந்த டோக்கன்கள் அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மந்தைவெளி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, சென்டிரல் ரெயில் நிலையம், பிராட்வே, குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி எஸ்டேட், அய்யப்பன்தாங்கல், வடபழனி, கே.கே.நகர், ஆதம்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் ஓ.டி., ஆவடி, அயனாவரம், ஐ.சி.எப்., தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, எண்ணூர், வியாசர்பாடி, மாதவரம், பாடியநல்லூர், செங்குன்றம், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி, பெரம்பூர், வள்ளலார் நகர், செம்மஞ்சேரி, திருவொற்றியூர், கிளாம்பாக்கம், குன்றத்தூர் ஆகிய 40 பணிமனை பேருந்து நிலையங்களில் வழங்கப்படுகிறது.
இருப்பிட சான்றாக ரேஷன் அட்டை, வயது சான்றிற்காக ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை போன்றவையும் மற்றும் 2 கலர் புகைப்படங்களும் கொடுத்து டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிகளும் இதில் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications