முடிஞ்சு போச்சுன்னு நினைச்ச பரந்தூர் திட்டம்.. ரூ.680 கோடி விவகாரத்தில் ஐகோர்ட்டில் புது மனு
சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தமிழக அரசு கைவிட்டுள்ளது.. ஒரு பக்கம் விவசாயிகளின் வாழ்வாதாரம், இன்னொரு பக்கம் பல நூறு கோடி ரூபாய் அரசு செலவு.. சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக உருவாக இருந்த இந்த திட்டம் குறித்து தமிழக அரசு எடுத்த முடிவு, இப்போது நீதிமன்றத்தின் கவனத்துக்குச் சென்றுள்ளது. இந்த வழக்கில் இன்று என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.,,!!
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகள் நெரிசலைக் குறைக்க, சுமார் ரூ.27,000 கோடி செலவில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக 1,700 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த ரூ.680 கோடி செலவிடப்பட்டு, 48 சதவீத நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன.

பரந்தூர் விமான நிலைய திட்டம்
ஆனால், விமான நிலையத்துக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தார். இந்த முடிவை எதிர்த்துத்தான் தற்போது சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பு
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்ட தமிழக அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு இன்று நவம்பர் 20 விசாரணைக்கு வருகிறது. சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் கவுதமன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், திட்டத்தை கைவிடும் அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
ரூ.27,000 கோடியில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, இதற்காக 1,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ரூ.680 கோடி செலவிடப்பட்டு, 48 சதவீத நிலங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ளன. பன்னூர், திருப்போரூர், படாளம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்த பிறகே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.
மொத்தம் 2,325 ஹெக்டேர் நிலத்தில் விமான நிலையம் அமைக்க 1,527 ஹெக்டேர் தனியார் நிலத்தை கையகப்படுத்தவும், 798 ஹெக்டேர் அரசு நிலத்தை வகை மாற்றம் செய்யவும் 2023ல் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், தொழில்நுட்ப விவரங்கள், நிபுணர் குழு அறிக்கைகள், பொருளாதார ஆய்வுகள் எதுவும் இல்லாமல் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, திட்டத்தை கைவிடுவது தொடர்பாக முதலமைச்சர் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கக் கூடாது என்றும் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.
இன்று விசாரணை
இந்த வழக்குதான் இன்று விசாரணைக்கு வருகிறது.. அதாவது, பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதற்கு விவசாயிகளின் வாழ்வாதார பாதிப்பு முக்கிய காரணமாக மனுவில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஏற்கெனவே நிலம் கையகப்படுத்தப்பட்டு அரசு பணமும் செலவிடப்பட்டுள்ளது. திட்டத்தை தொடர்ந்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன, கைவிட்டால் அரசுக்கு ஏற்படும் இழப்பு என்ன என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.
அதனால் இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு அரசு உரிய ஆய்வுகளை மேற்கொண்டதா என்பதுதான் இந்த வழக்கில் முக்கியமான கேள்வியாக இருக்கும். மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் மட்டும் அரசின் முடிவு தவறானதாகிவிடாது. அதேபோல், திட்டத்தை கைவிட்டதற்கான காரணங்களை நீதிமன்றத்தில் அரசு தெளிவுபடுத்த வேண்டிய சூழலும் உருவாகியுள்ளது. இன்றைய தினம் விசாரணையில் 2 தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே அடுத்தகட்ட நிலை தெரியவரும்.


Click it and Unblock the Notifications
