ஜெயலலிதா முதல் கமல்ஹாசன் வரை.. ராஜ்ய சபா சென்ற தமிழ் நடிகர்கள்.. லிஸ்டில் எதிர்பார்க்காத பிரபலங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான கமல்ஹாசன் மாநிலங்களவை தேர்தல் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழ் சினிமாவில் இருந்து ராஜ்ய சபா எம்பி-யான பட்டியலில் கமல்ஹாசன் இணைந்துள்ளார். ஜெயலலிதா, சோ ராமசாமி என்று தொடங்கும் இந்த பட்டியலில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை பொறுப்பு வகித்த ஜெயலலிதா தமிழ் சினிமாவில் இருந்து வந்தவர். 140க்கும் அதிகமான படங்களில் நடித்த ஜெயலலிதா, எம்ஜிஆர் மீது கொண்ட மரியாதை காரணமாக அதிமுகவில் இணைந்தார். அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக செயல்பட்டு வந்த அவர், 1984 - 1989 வரை மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். முன்னாள் முதலமைச்சர் அண்ணா அமர்ந்த இருக்கையை கேட்டு பெற்று ஜெயலலிதா அமர்ந்தார்.

Kamal Haasan Rajya Sabha DMK

சிவாஜி கணேசன்

அதேபோல் நடிகர் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்தவர். எம்ஜிஆர்-க்கு போட்டியாக சினிமாவில் இருந்து பயணித்த அவர், பின்னர் அரசியலுக்கு வந்து புதிய பாதையில் பயணித்தாலும், அவரால் ஜொலிக்க முடியவில்லை. இவர் 1982 முதல் 1986 வரை மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டுள்ளார்.

Kamal Haasan Rajya Sabha DMK

எஸ்எஸ் சந்திரன்

அதேபோல் தமிழ் சினிமாவில் 800க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் எஸ்எஸ் சந்திரன். நடிகர் விஜய் நடித்த ஒன்ஸ் மோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வருவார். இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் செயல்பட்டு வந்துள்ளார். ஜெயலலிதா தலைமை ஏற்றபின்னரும், அவருடன் பயணித்து வந்த அவர், 2001ஆம் ஆண்டு ராஜ்ய சபா பதவி அளிக்கப்பட்டது.

Kamal Haasan Rajya Sabha DMK

சோ ராமசாமி

தொடர்ந்து, நடிகரும், பத்திரிகையாளருமான சோ ராமசாமி இந்த பட்டியலில் இருக்கிறார். 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள சோ ராமசாமி, தேசிய அளவில் ஏராளமான அரசியல் பிரபலங்களுடன் நட்பில் இருந்தார். இவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் தேர்வு செய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.

Kamal Haasan Rajya Sabha DMK

சரத் குமார்

இந்தப் பட்டியலில் நடிகர் சரத் குமாரும் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கலாம். சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குவதற்கு முன்பாக திமுக சார்பாக 2001ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார். அதன்பின் திமுக உடனான மோதலால், 2007ல் சமகவை தொடங்கினார். அதனை இப்போது பாஜகவில் இணைத்து, அக்கட்சியுடன் பயணித்து வருகிறார்.

Kamal Haasan Rajya Sabha DMK

கமல்ஹாசன்

இந்த பட்டியலில் தற்போது கமல்ஹாசன் இணைந்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியை 2018ஆம் ஆண்டு தொடங்கிய கமல்ஹாசன், முதலில் நாடாளுமன்றத் தேர்தலிலும், பின்னர் 2021ல் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார். அதில் மநீம கட்சி உறுப்பினர்கள் யாரும் வெல்லாத நிலையில், 2024 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்தார். அப்போது மநீம கட்சிக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டு, இப்போது கமல்ஹாசன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Kamal Haasan Rajya Sabha DMK
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+