சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கஜா புயல் நிவாரண பணிகள் எந்தளவில் உள்ளது.. முதல்வர் பழனிச்சாமி அறிக்கை!

கஜா புயலை தொடர்ந்து நடத்தப்பட்ட மீட்பு பணிகள் குறித்து முதல்வர் பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கஜா புயலை தொடர்ந்து நடத்தப்பட்ட மீட்பு பணிகள் குறித்து முதல்வர் பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கஜா புயல் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இயல்பு வாழ்க்கை மொத்தமாக நசிந்து போய் உள்ளது. இந்த புயலால் 7 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Gaja Storm: TN CM releases report on Governments relief work status

இந்த நிலையில் கஜா புயல் பாதிப்பு குறித்தும், நடத்தப்பட்ட மீட்பு பணிகள் குறித்தும் முதல்வர் பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கஜா புயலால் 45 பேர் பலியானது வருத்தமளிக்கிறது. கஜா புயலால் 102 மாடுகள், 633 ஆடுகள் உயிர் இழந்துள்ளது.

Gaja Storm: TN CM releases report on Governments relief work status

பலியான 45 பேரின் குடும்பங்களுக்கும் தலா 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். கஜா புயலால் 56,942 குடிசைகள் சேதம் அடைந்துள்ளது. 30,328 ஓட்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதற்கான இழப்பீடுகள் தனியாக வழங்கப்படும்.

நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் நடக்கிறது. பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் கணக்கிட்ட பின் வழங்கப்படும்.

கூடுதலாக ஐஏஎஸ் அதிகாரிகள் நிவாரண பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதிமுக அமைச்சர்கள் இந்த பணிகளை கண்காணிப்பார்கள். பணிகளின் போது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Gaja Storm: TN CM releases report on Government's relief work status.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X