சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அவர்" வந்த நாள் முதல் என்னை வெளியேற்ற திட்டம்.. மீண்டும் கம் பேக் கொடுப்பேன்.. காயத்ரி அதிரடி!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜகவுக்கு வந்த நாள் முதல் என்னை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என துடித்துக் கொண்டிருந்ததாக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். காயத்ரி யார் பெயரையும் குறிப்பிடாமல் ஆங்கிலத்தில் he என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்தியுள்ளதால் அண்ணாமலையை சொல்கிறாரா, இல்லை செல்வக்குமாரை சொல்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்தும் அவரது டீம் என கூறப்படும் ஒரு சில நிர்வாகிகள் குறித்தும் அவர்களது செயல்பாடுகள் குறித்தும் ட்விட்டரில் கடந்த சில நாட்களாக காயத்ரி ரகுராம் ட்வீட் போட்டு வருகிறார்.

தன்னை பற்றி கொச்சையான கமென்ட்டால் கோபமடைந்த காயத்ரி இது போல் கொந்தளிப்புடன் ட்வீட் போட்டுள்ளார். இதனால் பாஜகவில் இருந்த உள்கட்சி பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது. இது கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தியதாக கூறி காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை இன்றைய தினம் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளார்.

பாஜகவில் வார் ரூம்..மன அழுத்தம்..விளக்கம் கேட்காமலேயே சஸ்பெண்ட்.. குமுறும் காயத்ரி ரகுராம் பாஜகவில் வார் ரூம்..மன அழுத்தம்..விளக்கம் கேட்காமலேயே சஸ்பெண்ட்.. குமுறும் காயத்ரி ரகுராம்

ட்விட்டர்

ட்விட்டர்

இதுகுறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: இந்த நடவடிக்கையை நான் ஏற்கிறேன். என்னிடம் பேச விரும்பும் நிர்வாகிகளை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. நான் தேச நலனுக்காக உழைப்பேன். நான் பாஜகவுக்கு எதிராக செயல்படுவதாக கூறுவதை நான் ஏற்க மாட்டேன்.

பதிலடி

பதிலடி

அவ்வாறு யார் சொன்னாலும் நான் பதிலடி கொடுப்பேன். தனிப்பட்ட எந்த ஒருவரும் கட்சி அல்ல. விசாரணையே இல்லாமல் ஒரு முடிவை எடுக்க முடியும் என்றால் அதுதான் பதவி அதிகாரம். வந்த நாள் முதல் என்னை வெளியேற்றுவதிலேயே அவர் குறியாக இருந்தார். நான் நல்ல வலிமையுடன் மீண்டும் வருவேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் காயத்ரி கூறியிருக்கிறார்.

டே 1 முதல்

டே 1 முதல்

டே 1 முதல் தன்னை நீக்க அவர் விரும்புகிறார் என காயத்ரி கூறுவதை பாஜக தலைவர் அண்ணாமலையையா இல்லை செல்வகுமாரையா என தெரியவில்லை. தனது மற்ற ட்வீட்டுகளில் செல்வக்குமாரின் டிவிட்டர் ஹேண்டிலை டேக் செய்து காயத்ரி ட்வீட் போட்டுள்ளார்.

 செல்வக்குமார்

செல்வக்குமார்

எனவே தற்போது செல்வக்குமாரை அவர் சொல்லியிருக்க மாட்டார் என்றால் அவர் அண்ணாமலையை குறிப்பிட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் காயத்ரி ரகுராம் செய்தியாளர்களையும் சந்தித்தார். அவர் கூறியிருப்பதாவது: சஸ்பெண்ட் செய்யப்பட்டது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

 28 தமிழர்கள் மீட்பு

28 தமிழர்கள் மீட்பு

நான் வெளிநாடு , வெளிமாநில தமிழ் வளர்ச்சி துறை தலைவராக இருந்த போது 28 பேரை மியான்மர், கம்போடியா, துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து மீட்டுள்ளேன். பெரும்பாலும் என் சொந்த செலவில் நிறைய பேருக்கு உதவிகளை செய்துள்ளேன். 3 மாதங்களுக்கு முன்னர் வந்த செல்வக்குமார் என்பவர் கோவையில் ஒரு பெரிய வாட்ஸ் ஆப் குரூப்பை வைத்துள்ளார். அதில் இருப்பவர்கள் எல்லாம் ஒன்றாக வேலை பார்க்கிறார்களா, என்ன, ஏது என எதுவும் தெரியவில்லை.

சும்மா இருக்க முடியாது

சும்மா இருக்க முடியாது

என்னை பற்றிய ஒரு கொச்சையான ட்வீட்டிற்கு செல்வகுமார் லைக் கொடுத்தால் அதை பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருக்க வேண்டுமா? கடன் வாங்கி கடந்த 8 ஆண்டுகளாக நிறைய உதவிகளை செய்துள்ளேன். என்னிடம் விளக்கம் கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் showcause நோட்டீஸ் கூட கொடுக்கவில்லை என்றார்.

English summary
Gayathri Raghuram tweets that he wanted to out her from day 1. She will come back stronger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X