நிலத்தை வைத்திருப்பவர்களுக்கு உடனே பட்டா.. அட பட்டா மாறுதலிலும் சூப்பர்.. தமிழக அரசின் ஹேப்பி நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு பட்டா வழங்க தமிழக அரசு ஏற்கனவே ஒப்புதல் தந்திருந்த நிலையில், வீட்டு வசதி வாரியத்திடமிருந்து வாங்கிய சொத்திற்கு பட்டா பெறவும் சிறப்பு முகாம்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.. இந்நிலையில் தமிழக அரசு மீண்டும் குட்நியூஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது.. வரும் டிசம்பருக்குள், 6.29 லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் அதிரடியாக அறிவித்திருப்பது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
சமீபத்தில் நடந்த தமிழக அமைச்சரவையில் உரையாற்றியிருந்த முதல்வர் ஸ்டாலின், 86000 பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதற்கேற்றார்போல், வருவாய் துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் நிகழ்ச்சியொன்றில் பேசியபோது, "சென்னையில் 60000 க்கும் மேற்பட்ட பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 86,368 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன" என்று தகவல் கூறியிருந்தார்.

மேற்கண்ட அறிவிப்புகளுக்கு ஏற்றவாறு பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.. இதற்கான முகாம்களும் அவ்வப்போது நடத்தப்பட்டும் வருகின்றன.
பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா
கடந்த வாரம் தமிழ்நாடு சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கொள்கை விளக்க குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டா வழங்குவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் வழிகாட்டுதலுடன், அலுவலர்கள் மேற்கொண்ட பணியால், இதுவரை தமிழ்நாட்டில் 1,36,149 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது" என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், நில வரன்முறை நடவடிக்கைகள் அடிப்படையில் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதுகுறித்து சட்டசபையில் நேற்று, மானிய கோரிக்கை விவாதங்களுக்கு பதில் அளித்து வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். அமைச்சர் பேசியதாவது:
நில வரன்முறை நடவடிக்கைகள்
"கடந்த, 2000ம் ஆண்டில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு, நில வரன்முறை நடவடிக்கைகள் துவக்கப்பட்டன. அதன் அடிப்படையில், தகுதி வாய்ந்த மக்களுக்கு நிலத்துக்கான பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வெவ்வேறு திட்டங்கள் வாயிலாக, அனைத்து பிரிவு மக்களுக்கும், வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், நடப்பாண்டில், 6.29 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 3.55 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டு விட்டன. மீதம் உள்ள பட்டாக்களை மாதத்துக்கு, 50,000 வீதம் டிசம்பருக்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு, 1.11 கோடி பட்டாக்களில் பெயர் மாறுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
பட்டா வழங்கும் திட்டம்
வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட பகுதிகளில், வீடு வாங்கிய மக்களுக்கு நேரடியாக பட்டா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், விடுபட்டவர்களுக்கு விரைவாக பட்டா வழங்கப்படும்.
சென்னையை சுற்றியுள்ள, பெல்ட் ஏரியா பகுதியில் பட்டா வழங்க, 1962ல் தடை விதிக்கப்பட்டது. அதில் திருத்தம் செய்து, இப்போது பட்டா வழங்கும் பணி துவங்கியுள்ள நிலையில், இதற்கான விதிமுறைகளில் விரைவில் சிறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் கோரி, இ-சேவை மையங்கள் வாயிலாக வரும் விண்ணப்பங்களை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் நிராகரிப்பு
இந்த விண்ணப்பங்கள் மீது, 15 நாட்களுக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும். ஆனால், பல இடங்களில் காரணம்கூறாமல், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதால், மக்கள் மீண்டும் தாலுகா அலுவலகங்களுக்கு வந்து நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் கேள்விக்குறியாகிறது. எனவே, நிராகரிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு, உரிய காரணங்களை தெரிவிக்க வேண்டும் என, அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மெட்ராஸ் ரேஸ்கோர்ஸ், தோட்டக்கலை சங்கம், ஊட்டி ரேஸ் கோர்ஸ் வைத்திருத்த அரசு நிலம் மீட்கப்பட்டு,மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 4 வருடங்களில் ஆண்டுகளில், 20,330 கோடி ரூபாய் மதிப்புள்ள, 35,650 ஏக்கர் அரசு நிலம், தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications