உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. முதல்நாள் செய்யப்பட்ட முதலீடு எவ்வளவு தெரியுமா?
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேற்று சுமார் 90,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.
சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேற்று சுமார் 90,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.
சென்னை நந்தம்பாக்கத்தில் தற்போது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. தமிழக அரசு சார்பாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று தொடங்கிய மாநாடு இன்று மாலை வரை நடக்கிறது. சுமார் 2.55 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்த மாநாடு மூலம் முதலீடு பெறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் யார்
இந்த மாநாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்றாலும் கூட, உள்நாட்டை சேர்ந்த நிறுவனங்கள்தான் அதிகம் கலந்து கொண்டது. உள்நாட்டை சேர்ந்த நிறுவனங்கள்தான் நேற்று அதிக அளவில் முதலீடுகளையும் செய்தது. ஏற்கனவே தமிழகத்தில் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்கள் மேலும் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

எந்த நிறுவனம்
ஹூண்டாய், அதானி, இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்கள் அதிக முதலீடுகளை தமிழகத்தில் செய்துள்ளது. அதானி குழுமம், தமிழகம்தான் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஏற்ற மாநிலம் என்று குறிப்பிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.அதேபோல் சியெட் டயர்ஸ், மஹிந்திரா குழுமமும் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்கள்
அதேபோல் சில வெளிநாட்டு நிறுவனங்களும் முதல் நாள் மாநாட்டில் முதலீடு செய்தது. ஐபோன் நிறுவனம் சென்னையில் ஐபோன் தயாரிப்பதற்கான அறிவிப்பை நேற்றுதான் வெளியிட்டது. அதேபோல் போர்ட் கார் நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளது. பிரபல சால்காம்ப் நிறுவனமும் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளது.

எவ்வளவு முதலீடு
அதானி குழுமம் 12,000 கோடி ரூபாய், சியெட் டயர்ஸ் 4,000 கோடி ரூபாய், இந்தியன் ஆயில் நிறுவனம் 16,641 கோடி ரூபாய், ஃபோர்டு நிறுவனம் 1,300 கோடி ரூபாய், ஹூண்ட்டாய் கார் நிறுவனம் 7,000 கோடி ரூபாய் என்று முதல் நாளில் 90 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.பல சிறிய நிறுவனங்களும் இதில் முதலீடு செய்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications