சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"திரும்பிப் போங்கள் அமித்ஷா".. நேற்று முதல் விடாமல் டிரெண்ட் அடித்த GoBackAmitShah

அமித்ஷா தமிழகம் வந்துள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று முதலே ட்விட்டரில் ‘Go Back Amit Shah' என்ற ட்ரெண்ட் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: அமித்ஷா தமிழகம் வந்துள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று முதலே ட்விட்டரில் 'Go Back Amit Shah' என்ற ட்ரெண்ட் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. அமித்ஷாவிற்கு வரவேற்பு அளிக்கும் வகையில் மறுபுறம், பாஜகவினர் மற்றும் ஆதரவாளர்கள் சார்பில் தொடங்கப்பட்ட TN Welcomes Amit Shah என்ற ட்ரெண்ட் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வரும்போது அவரது எதிர்ப்பாளர்கள் சார்பில் 'Go Back Modi' என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு இந்திய அளவில் முதலிடம் பிடிக்கப்படும். இது ஒவ்வொரு முறையும் தொடருவதைக் கண்ட பாஜகவினர் 'TN Welcomes Modi' என ட்ரெண்ட் செய்து அதையும் முன்னணி ட்ரெண்டுகளில் கொண்டுவந்துவிடுவர்.

இந்த முறை அமித்ஷாவுக்கும் இதேபோன்ற ட்ரெண்ட் போர் தொடங்கியுள்ளது. அமித்ஷா தமிழகம் வந்துள்ள நிலையில் நேற்று முதலே ட்விட்டரில் 'Go Back Amit Shah' என்ற ட்ரெண்ட் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்திய அளவில் முதலிடம்

பழனி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் வீடியோவை வைத்து அமித்ஷாவிற்கு எதிர்ப்பான கே பேக் அமித்ஷா என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர்.

சிங்கிள் சீட் இல்லையே

மத்திய அரசில் பாஜக மெஜாரிட்டியாக இருக்கலாம் ஆனால் சிங்கிள் சீட் தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியலையே என்று பதிவிட்டுள்ளார் ஒரு பதிவர்.

ஒய் பிளட் சேம் பிளட்

மோடி தமிழகம் வரும் போதெல்லாம் கோ பேக் மோடி என்று ட்ரெண்ட் செய்வார்கள். இப்போது அமித்ஷாவிற்கும் கோ பேக் அமித்ஷா என்று ட்ரெண்ட் செய்வதால் ஒய் பிளட் சேம் என்று வடிவேலு பாணியில் கேட்டிருக்கிறார் இந்த பதிவர்.

பெரியார் மண்

தமிழ்நாடு பெரியரின் நிலம், சுய மரியாதை மண். காவிகளை தமிழகம் ஏற்காது. இது குஜராத், உபி அல்ல. பாஜகவை தமிழகம் நிராகரிக்கும் என்று பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.

English summary
Senior BJP leader and Union Home Minister Amit Shah is visiting Chennai today From the previous night, #GoBackAmitShah has been a top trend on Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X