நேரம் நல்லா இருக்கு.. சர்ருனு சரியுதே தங்கம் விலை! உலகம் முழுவதும் இதே நிலை தான்..அள்ளி போடுங்க

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக போர் காரணமாக தங்கத்தின் விலை திடீரென ராக்கெட் வேகத்துக்கு உயர்ந்து 3000 டாலரை தாண்டியது. இந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2993 டாலராக உள்ளது. ஒரு அவுன்ஸ் என்பது 28.34 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் உலக அளவில் இந்திய மதிப்பில் இரண்டு லட்சத்து 58 ஆயிரத்து 993.38 ரூபாயாக இருக்கிறது

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்று இருக்கிறார் டொனால்ட் டிரம்ப். பதவியேற்றதிலிருந்து இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளை சீண்டி வருவது உலக அளவில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் பல்வேறு நாடுகள் மீது பதிலுக்கு பதில் வரி விதிப்பை அறிமுகப்படுத்துவேன் என கூறி அதிர வைத்திருக்கிறார். குறிப்பாக சீனா, கனடா, மெக்ஸிகோ இந்தியா உள்ளிட்ட நாடுகள் 100% அளவுக்கு வரி விதிக்கும் நிலையில் அந்த நாடுகள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கும் அதே அளவு வரி விதிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.

Gold Price Trade War donald trump

வர்த்தக போர்:

இந்தியா உள்ளிட்ட நாடுகள் எவ்வளவு வரி இருக்கிறதோ அதே அளவு வரியை நாங்களும் இருப்போம் என்றதோடு ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என அறிவித்திருக்கிறார். அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு சீனா, கனடா, மெக்சிகோ உள்ள நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இதனால் உலக அளவில் பொருளாதார நிலைத் தன்மையில் சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது. பல பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை தேர்ந்தெடுத்து இருப்பதால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்தது.

தங்கம் விலை:

குறிப்பாக 15க்கும் மேற்பட்ட முறை புதிய உச்சத்தை தங்கத்தின் விலை தொட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் வரை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3000 டாலருக்கு மேல் அதிகரித்தது. 3110 டாலர் வரை தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் எனவும் பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தனர். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. 3050 டாலர் விற்பனையான தங்கம் தற்போது 2993 டாலராக உள்ளது.

அமெரிக்க பொருட்கள் வரி:

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனப் பொருட்களுக்கு 104% சுங்கவரி விதிக்க முடிவு செய்துள்ள நிலையில், தங்கள் நாட்டிடம் பொருளாதார சிக்கல்களைச் சமாளிக்க போதுமான வழிகள் இருப்பதாக சீனப் பிரதமர் லி கியாங் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த வாரம் அமெரிக்கா உலக நாடுகளுடனான வர்த்தகத்தில் சுங்க வரி அறிவித்ததால், தங்கம் உள்ளிட்ட பல சொத்துகளின் விலை தடுமாறியது. பொதுவாக பாதுகாப்பான முதலீடாகக் கருதப்பட்டாலும், உலகளாவிய பணப்புழக்க சிக்கல்களால் தங்கமும் பாதிக்கப்படுகிறது என்று எம்.கே.எஸ் பாம்ப் நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவர் நிக்கி ஷீல்ஸ் கூறியது கவனிக்கத்தக்கது.

தங்கம் விலை நிலவரம்:

இருப்பினும், இந்த ஆண்டு தங்கத்தின் விலை 13%க்கும் மேல் உயர்ந்து, புதிய உச்சங்களைத் தொட்டு, முதலீட்டு நிதிகளை ஈர்த்துள்ளதும் பொருளாதார நிச்சயமின்மை அதிகரித்ததால், தங்கத்துக்கு ஆதரவு கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கும் ஆபத்தும், பொருளாதார வளர்ச்சி குறையும் அபாயமும் இருப்பதால், தங்கத்தின் விலை உயர்வு இனி இருக்கும் என்கிறார் ஷீல்ஸ்.

தங்கம் விலை சரிவு:

தற்போத் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் $2,993 ஆக மாற்றமின்றி இருந்தது. வெள்ளி விலை சற்று குறைந்த நிலையில், பிளாட்டினம் விலை சிறிது உயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+