சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் 984 ரூபாய் சரிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் 984 ரூபாய் சரிந்துள்ளது. அதாவது நேற்று 31544 ரூபாய்க்கு விற்ற ஒரு பவுன் தங்கம் அடுத்த 24 மணி நேரத்தில் 30560 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்துக்கும் கொரோனா பாதிப்பு வந்துவிட்டதோ என்னவோ.. கொரோனோ அச்சத்தால் தங்கத்தில் பலரும் முதலீடு செய்த காரணத்தால் தங்கத்தின் விலை கடந்த வாரம் மார்ச் 8ம் தேதி அன்று ரூ.33,656 ஆக உயர்ந்தது. அதாவது ஒரு கிராம் தங்கம் 4,207 ரூபாய்க்கு உயர்ந்தது. இதனால் தங்கம் வாங்கும் ஆசையே மக்களுக்கு இல்லாத அளவுக்கு போனது.

Gold prices extended fall for the fifth consecutive day to Rs 30,560 per 8 gram in chennai

இதனிடையே இந்தியாவில் கொரோனா பரவி வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதே கொரோனா அச்சத்தால் தங்கம் விலை சரிய ஆரம்பித்தது. அதுவும் எந்த வேகத்தில் ஏறியதோ அதே வேகத்தில் சரிந்தது.

இதன்படி தங்கம் விலை மார்ச் 8ம் தேதி ஒரு பவுன் .33656க்கு விற்பனையான நிலையில் அடுத்த நாளான மார்ச் 9ம் தேதியே ரூ.33,448க்கு குறைந்தது. ஆனால் மார்ச் 10ம் தேதி மிகப்பெரிய உச்சமாக ரூ.33,712 ஆக உயர்ந்தது. ஆனால் மார்ச் 11ம் தேதி :ரூ. 33,312 ஆக குறைந்தது. அடுத்த நாள் மார்ச் 13ம் தேதி மிக அதிரடியாக ஒரே நாளில் 1096ரூபாய் சரிந்து 32160க்கு விற்பனையானது.

இந்நிலையில் மார்ச் 14ம் தேதி மேலும் 688 ரூபாய் சரிந்து 31,472 ரூபாய்க்கு விற்பனையானது. மார்ச் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் சந்தைக்கு அன்று விடுமுறை அதனால் விலைகள் மாற்றமில்லாமல் விற்பனையானது.

ஆனால் அடுத்த நாளான நேற்று அதாவது மார்ச் 16ம் தேதி தங்கம் விலை கொஞ்சம் அதிகரித்து ரூ.31,544க்கு விற்பனையானது. ஆனால் இன்று தங்கம் விலை யாரும் எதிர்பாராதவிதமாக ஒரே நாளில் 984 ரூபாய் சரிந்து ரூ.30, 560க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை 3820க்கு விற்பனையாகிறது. கடந்த மார்ச் 10ம்தேதியுடன் ஒப்பிடும்போது ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை ரூ3152 ரூபாய் குறைந்துள்ளது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை 38100ஆக சரிந்து விற்பனையாகிறது.. அதாவது வெள்ளியின் விலை ஒரே நாளில் 2700 ரூபாய் சரிந்துள்ளது. வெள்ளி விலை கடந்த மார்ச் 8ம் தேதியுடன் ஒப்பிடும் போது 12400 ரூபாய் சரிந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+