Gold Rate Today: தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 4) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,720-க்கு விற்பனையாகிறது. கடந்த மூன்று நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1320 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்க நாட்டின் அதிபராக டிரம்ப் பதவியேற்றது மற்றும் உலகில் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் போர் உள்ளிட்ட காரணத்தால் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில நாட்கள் விலை இறங்கினாலும், ஒரு சில நாட்களில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்குகிறது.

ஒரு கிராமின் விலை 9 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தங்கம் நுகர்வை பொதுமக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர்.
கடந்த மே மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 15 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.68,880-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 8ஆம் தேதி ஒரு சவரன் ரூ.73,040 க்கு விற்பனையானது. ஜூன் 4 ஆம் தேதியான இன்று சவரனுக்கு ரூ.80 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.9,090-க்கும், ஒரு சவரன் ரூ.72,720-க்கும் விற்பனை செய்யப்படுகஇறது. சென்னையில் கடந்த 3 நாட்களில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்துள்ளது.
கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
04.06.2025- ஒரு சவரன் ரூ.72,720
03.06.2025- ஒரு சவரன் ரூ.72,640
02.06.2025- ஒரு சவரன் ரூ.71,600
01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360
31.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
30.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
29.05.2025- ஒரு சவரன் ரூ.71,160












Click it and Unblock the Notifications