சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குட் ஃப்ரைடே - உலகமெங்கும் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி அனுஷ்டிப்பு - தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

இன்று புனித வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை துக்க நாளாக கடைபிடிக்கின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டருக்கு முந்தைய வெள்ளிக்கிழமை உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் புனித வெள்ளி என்று அனுசரிக்கப்படுகிறது. கர்த்தராகிய ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி. கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள் நாள் முழுவதும் நோன்பையும் தவத்தையும் புனித வெள்ளியன்று கடைப்பிடிப்பார்கள். இன்றைய தினம் உலகெங்கிலும் புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது.

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அந்த நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாளையே புனிதவெள்ளியாக கடைபிடிக்கின்றனர்.

''அருண்ஜெட்லியும், சுஷ்மா ஸ்வராஜும் மோடி சித்ரவதையால் இறந்தனர்''.. வம்பை விலைக்கு வாங்கிய உதயநிதி! ''அருண்ஜெட்லியும், சுஷ்மா ஸ்வராஜும் மோடி சித்ரவதையால் இறந்தனர்''.. வம்பை விலைக்கு வாங்கிய உதயநிதி!

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் புனித வெள்ளி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்த சொல் வேறு சில மத புத்தகங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த நூல்களில், ஏசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான யூதாஸ் இஸ்காரியோட்டுக்குப் பிறகு ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏசுவை காட்டிக்கொடுத்த சீடன்

ஏசுவை காட்டிக்கொடுத்த சீடன்

முப்பது வெள்ளிக்காசுகளுக்காக ஏசுவை அவரது சீடராக இருந்த யூதாஸ் என்பவரே காட்டிக் கொடுத்தார் என்று வரலாறு கூறுகிறது. ஏசு கிறிஸ்துவைக் கைது செய்ய எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகளிடம் யூதாஸ் நேராகச் சென்றார். ஏசு கிறிஸ்துவைப் பற்றிய தகவல் வீரர்களுக்கு தெரிவிக்க யூதாஸ் 30 வெள்ளி நாணயங்களை வாங்கிக் கொண்டு காட்டிக்கொடுக்க ஜெருசலேம் காவலர்களால் ஏசு கைது செய்யப்பட்டார்.

சிலுவையில் அறையப்பட்டார்

சிலுவையில் அறையப்பட்டார்

முள் கிரீடம் அணிவிக்கப்பட்டு சிலுவையை சுமக்க வைத்து கல்வாரி மலைக்கு அழைத்து சென்றனர் காவலர்கள். கல்வாரி மலையில் உள்ள குன்றின் மேல் ஏசுவை சிலுவையில் அறைந்தார்கள். எசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை என்று நம்பப்படுகிறது.

குட் ஃப்ரைடே

குட் ஃப்ரைடே

இந்த புனித வெள்ளியை இன்று கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். இன்று உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை அனுஷ்டிக்கிறார்கள். இந்த நாளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, நற்கருணை வழிபாடு ஆகியவை நடைபெற்றது. இதில், திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

ஈஸ்டர் கொண்டாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

இன்று முழுவதும் கிறிஸ்தவர்கள் ஒரு வேளை உணவு மட்டும் அருந்தி தவம் இருப்பர். இன்று இரவுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் முடிவுக்கு வரும். நாளை சனிக்கிழமை நள்ளிரவு 11 மணிக்கு மேல் ஈஸ்டர் கொண்டாட்டங்கள் தொடங்கும். மரித்த ஏசு உயிர்த்தெழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனை முன்னிட்டு சிறப்பு பிராத்தனைகளும் நடைபெறும்.

ஈஸ்டர் பெருநாள்

ஈஸ்டர் பெருநாள்

ஏசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து மூன்றாவது நாள் அவர் உயிர்த்தெழுந்து தன்னுடைய சீடர்களுக்குக் காட்சி அளித்தார் என நம்பப்படுகிறது. அந்த நாளைத்தான் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் என்று சொல்லப்படும் உயிர்ப்புத் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். நாளை மறுநாள் ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

English summary
Today Good Friday the Friday before Easter, the day on which Christians annually observe the commemoration of the Crucifixion of Jesus Christ.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X