Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழம் நழுவி பாலில் விழுதே.. எடப்பாடி பழனிசாமியின் முடிவு.. தவிப்பில் விஜய்? தொண்டர்களுக்கு குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெகவுடன் கூட்டணி வைப்பதில் அதிமுக தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது.. ஆனால், தான் தான் முதலமைச்சர் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் என்று சொல்லி ஓட்டு கேட்பது தனக்கு பின்னடைவை தந்துவிடுமா? என்றெல்லாம் தயக்கத்தில் விஜய் இருந்து வருகிறாராம். எனினும் இதுவரை எந்த முடிவையும் எடுத்ததாக தெரியவில்லை" என்கிறார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.

Aram Naadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, கரூர் சம்பவம் துக்கமான நிகழ்வு.. நாளைக்கு தவெக ஆட்சியை பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி, தவெகவுக்கு இது ஒரு கருப்பு புள்ளிதான்..

Edappadi Palanisamy AIADMK TVK

கரூர் சம்பவம் நடந்து 3 நாட்கள் கழித்துதான் வீடியோ வெளியிட்டார்.. அதில் அவர் துக்கம் தெரிவித்ததைவிட முதல்வர் மீதுதான் அதிக குற்றச்சாட்டை வீசியிருப்பதாக தெரிகிறது,

ஆதவ் அர்ஜூனா ட்வீட்

அந்த கட்சியின் பொதுச்செயலாளர் தலைமறைவு, துணைப்பொதுச்செயலாளர் தலைமறைவாக உள்ளார்.. ஆதவ் அர்ஜுனா ட்வீட் போட்டு டெலிட் செய்கிறார்.. இதுவரை தாங்கள் பொறுப்பேற்று கொள்கிறோம் என்பது போன்ற அறிக்கை வரவில்லை. சம்பவம் நடந்து 11வது நாளில்தான், கரூருக்கு செல்ல அனுமதி வேண்டும் என்று விஜய் தரப்பில் போலீசாரிடம் கோரப்பட்டுள்ளது,.

வழக்கமாக மாநாடு, கூட்டம் நடத்தினால், சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு போலீஸ்தான் கண்டிஷனை போடுவார்கள்.. ஆனால் போலீசுக்கே விஜய் சில கண்டிஷனை போட்டுள்ளார்.. எனினும் போலீசார் அனுமதி தருவார்கள் என்றே தெரிகிறது.

வீடியோ கால் பேச்சு

அதேபோல 2 நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டவர்களுடனும் வீடியோ காலில் பேசியிருக்கிறார்.. அவர்களை நேரில் சந்திப்பதாக சொல்லியிருப்பதால், போலீசாரின் அனுமதி கிடைத்ததுமே கரூருக்கு சென்று நிவாரண தொகையையும் அவர்களுக்கு தருவார் என்று தெரிகிறது.

விசாரணையில் கரூர் கூட்டத்தில் 60 டிரோன் கேமராக்களை பறக்க விட்டதாக கூறுகிறார்.. இதைத்தவிர ஆரி எலக்சா 35 என்ற விலை உயர்ந்த கேமரா சினிமாவில் பயன்படுத்தக்கூடியது, கரூர் நிகழ்வை இதுபோன்ற கேமராக்களில் பதிவு செய்து, அந்நிகழ்வை தன்னுடைய ஜனநாயகன் படத்தில் பயன்படுத்த போகிறார் என்று நக்கீரன் கோபாலும் சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளார்..

இதனிடையே எடப்பாடி பழனிசாமியின் பேச்சு பரபரப்பாக பேசப்படுகிறது.. திமுக, அதிமுகதான் வழக்கமாக களத்தில் போட்டியிடும் கட்சிகளாகும். ஆனால் திடீரென தவெக வந்துவிடவும், இரு கட்சிகளுக்கும் பதற்றத்தை தந்துவிட்டது,. அதிமுகவுடன் விஜய் இணைந்து பயணிப்பார், கூட்டணி வைப்பார் என்று பேசப்பட்டன..

அதிமுக தவெக பாஜக

அப்படி கூட்டணி ஆட்சி அமைந்தால், ஒரு வருடம் விஜய் முதலமைச்சர், இன்னொரு வருடம் எடப்பாடி முதலமைச்சர் என்ற பேச்சுவார்த்தையும் நடந்தது.. ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை. வேண்டுமானால் துணை முதலமைச்சர் பதவியை தருவதாக சொன்னாராம்.. இந்த சூழ்நிலையில்தான் சில நெருக்கடிகள் காரணமாக பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துவிட்டது.

இதனை தவெக எதிர்பார்க்கவில்லை.. தவிப்பான நிலையில் விஜய் உள்ளார்.. அதேபோன்ற நிலைமையில்தான் எடப்பாடியும் உள்ளார்.. விஜய்யுடன் சேர்ந்தால் வெற்றி பெறலாமே? பாஜகவுடன் எப்படி கூட்டணி? என்று சந்தேகத்திலேயே உள்ளார் எடப்பாடி.

எடப்பாடி பழனிசாமி

இந்த சூழலில் கரூர் சம்பவத்தை அரசியலாக்கிவிட்டார்கள்,.. இதற்கு போலீஸ்தான் காரணம் என்று அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழிசை சொல்கிறார்கள்.. இதையே எடப்பாடி பழனிசாமியும் சொல்கிறார்..

போதாக்குறைக்கு தவெக தொண்டர்களையும், தவெக கொடியையும் வரவேற்று பேசி வருகிறார். அதிமுக பிரச்சாரத்தில் தவெக கொடியை தூக்கி காட்டும் தொண்டர், அதிமுக டீஷர்ட்டை அணிந்துள்ளார்.. அப்படியானால் அதிமுக தொண்டர்களும் விஜய்யை ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டார்கள் என்றே தெரிகிறது.

இதுவே என்டிஏ கூட்டணிக்கு சாதகமான ஒரு சூழ்நிலையாக மாற்றி, விஜய்யை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகள் நடக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில், பழம் நழுவி போய்விடக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமியும், விஜய்யும் போனில் பேசியதாக தகவல்கள் கிடைக்கின்றன..

முதலமைச்சர் யார்

அந்த வகையில் இருவருமே கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பும் உள்ளதாக சொன்னாலும், கொள்கை எதிரி பாஜகவுடன் எப்படி இணைவது? தான் தான் முதலமைச்சர் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் என்று சொல்லி ஓட்டு கேட்பது தனக்கு பின்னடைவை தந்துவிடுமா? என்றெல்லாம் தயக்கத்தில் விஜய் இருந்து வருகிறாராம். எனினும் இதுவரை கூட்டணிக்கு சம்மதித்ததாக தெரியவில்லை" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+