Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசத்தல் அறிவிப்பு.. அழகான தமிழ்ப் பெயர்களுக்கு புதிய வெப்சைட்.. குழந்தைகளுகக்கு பெயர் வைக்க உதவும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ''குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும், அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்'' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்திலேயே உள்ளது. அனைத்து பெயர் பலகையிலும் தமிழை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும், அனைத்து பொது இடங்களிலுமுள்ள பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாகவே தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி கொண்டிருக்கிறார்கள்.

Tamil names website Children MK Stalin

தமிழ் வளர்ச்சித்துறை

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையும், தொழிலாளர் நல ஆணையமும் இதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கின்றன.. தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அரசின் சார்பில் 50 ரூபாய் என்றிருந்த அபராதம், பிறகு ரூ.2000 அபராதம் என்றானது..

அரசு ரீதியான விவகாரங்கள் இப்படியிருந்தாலும், "பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள்" என்று கட்சி நிர்வாகிகள் இல்ல திருமணங்களில் பங்கேற்கும்போதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின், கேட்டுக் கொண்டு வருகிறார்..

இன்றும் அப்படித்தான் ஒரு வேண்டுகோள் மணமக்களுக்கு விடுக்கப்பட்டது. திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவும், திமுக மாவட்ட செயலாளருமான வேலுவின் மகளின் திருமணம் நடைபெற்றது..

முதலமைச்சர் கோரிக்கை

இந்த திருமணத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னின்று நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்று மணமக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

கட்சி நிர்வாகிகள் இல்ல திருமண விழாவிற்கு செல்லும்போதெல்லாம், மணமக்களிடம் பிறக்கும் குழந்தைக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள் என்ற வேண்டுகோளையே முதல்வர் விடுத்து வருகிறார்.. அந்தவகையில்தான் இன்றும், மயிலை வேலு வீட்டு திருமணத்தில் மணமக்களிடமும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள் என்றார்.

தலைவரே - வெப்சைட் வேண்டும்

இதனிடையே, இந்த கல்யாண வீடியோவை சோஷியல் மீடியாவில் நிதன் சிற்றரசு என்பவர் ஷேர் செய்திருந்தார்.. அதில், ''குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க நினைத்தாலும், குழந்தை பெயர்கள் மற்றும் அதற்கான பொருளை தெரிந்துகொள்ள சரியான வெப்சைட்கள் தமிழ்நாட்டில் இல்லை. எனவே, இதற்காக தமிழ் வளர்ச்சித்துறை அல்லது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் வெப்சைட் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் தலைவரே! '' என்று கோரிக்கையுடன் பதிவிட்டிருந்தார்.


உடனே நிறைவேறிய கோரிக்கை

இதற்கு பதிலளிக்கும் விதமாக, முதலமைச்சர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தம்பி நிதின் சிற்றரசு கோரிக்கை நிறைவேற்றப்படும். குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும், அதற்கான பொருளும் அடங்கிய இணையதளம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்...

ஸ்டாலின் இப்படியொரு பதிவு போட்டதுமே, ஏராளமான தமிழ் மொழி ஆர்வலர்கள் மட்டுமின்றி, இளைஞர்களும், பெண்களும் திரண்டு வந்து வரவேற்பு தெரிவித்து கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+