சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை- 6 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை சென்னை ஆணையர் சங்கர் ஜிவால் பிறப்பித்திருந்தார்.

சென்னை அரும்பாக்கத்தில் தனியார் வங்கியின் தங்க நகைக் கடன் கிளையில், ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்டப்பகலில் மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்கள், பணியில் இருந்த மூன்று ஊழியர்கள் மற்றும் காவலாளி ஆகியோருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கத்திமுனையில் கட்டிப் போட்டு, லாக்கரில் இருந்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடித்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.

வங்கியில் பட்டப்பகலில் நடந்த இந்தக் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அரும்பாக்கம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

3 லட்சத்தில் எப்படி தொழில் தொடங்க முடியும்..மோடியின் முத்ரா திட்டம் நடைமுறையில் பயனற்றது-ப சிதம்பரம் 3 லட்சத்தில் எப்படி தொழில் தொடங்க முடியும்..மோடியின் முத்ரா திட்டம் நடைமுறையில் பயனற்றது-ப சிதம்பரம்

மண்டல மேலாளர்

மண்டல மேலாளர்

இதில் வங்கியில் மண்டல மேலாளராக பணிபுரிந்த முருகன் என்பவர், தன் கூட்டாளிகளுடன் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளை கும்பலை பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கடுமையான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

5 பேர் கைது

5 பேர் கைது

இந்த சம்பவத்தில் பாலாஜி, சந்தோஷ், சூர்யா, முருகன், செந்தில் ஆகிய 5 கைது செய்யப்பட்டனர். நகைகளை உருக்க ஸ்ரீவத்சவா என்பவரை பயன்படுத்தியுள்ளனர். இதையடுத்து விசாரணையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜிற்கும் இந்த கொள்ளையில் தொடர்பிருந்ததாக தெரியவந்தது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

6 கிலோ தங்கம்

6 கிலோ தங்கம்

இந்த அமல்ராஜ் குற்றவாளிகளிடம் இருந்து 6 கிலோ தங்கத்தை வாங்கி 3 நாட்களாக தனது வீட்டில் வைத்து பாதுகாத்து வந்தது தெரியவந்து. இந்த நகைகள் அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்டது என்பது நன்றாக அமல்ராஜுக்கு தெரியும். இவர்களில் நகைகளை 6 பேரும் பிரித்து பிரித்து எடுத்துச் சென்றுவிட்டனர். சந்தோஷ் மட்டும் கிட்டதட்ட 18 கிலோ எடை கொண்ட தங்கத்தை வைத்திருந்தார். இந்த நிலையில் இந்த 6 பேரிடமிருந்து 32 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

6 பேர் மீது குண்டர் சட்டம்

6 பேர் மீது குண்டர் சட்டம்

இந்த நிலையில் பாலாஜி, சந்தோஷ் உள்ளிட்ட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய சென்னை கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் இவர்கள் 6 பேரும் இனி ஓராண்டுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாது. இந்த குண்டர் சட்டத்தை எதிர்த்து இவர்கள் நீதிமன்றத்தை நாடவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

English summary
Goondas imposed on the 6 robberers who were involved in Chennai Arumbakkam Federal Bank robbery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X