சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரை பண்ணுங்க.. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை : மார்ச் மாதத்திற்கு பிறகு அதிதீவிரமாக பரவிய கொரோனா இரண்டாம் அலை கடந்த சில நாட்களாக இந்திய அளவிலும், தமிழகத்திலும் படிப்படியாக குறைந்து வருகிறது. நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், கொரோனா உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன

இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க! .

கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை குறைக்க தடுப்பூசிகள் செலுத்தும் பணி ஒரு புறம் நடைபெற்று வந்தாலும், மறுபுறம் மருத்துவ துறையின் அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த மருத்துவர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கொரோனாவை கட்டுப்படுத்திய ஆயுஷ்

கொரோனாவை கட்டுப்படுத்திய ஆயுஷ்

தமிழ் பாரம்பரிய மருத்துவமான சித்த, ஆயுர்வேத மருத்துவ வகைகள் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் அரசு மருத்துவமனை கோவிட் சென்டர்கள் போன்றவைகளில் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பெரிதும் இம்மருத்துவம் பங்காற்றியது.

உலக தமிழ் வம்சாவளி அமைப்பு கோரிக்கை

உலக தமிழ் வம்சாவளி அமைப்பு கோரிக்கை

சித்த, ஆயுர்வேத உலக மக்கள் பயன்பெறும் வகையில் உலக சுகாதார அமைப்பிற்கு தமிழக அரசு, அரசு மருத்துவமனை கோவிட் கேர் சென்டர்களில் நோய்த்தொற்று ஏற்பட்டு குணமாகி சென்றுள்ளனர். இவர்களின் எண்ணிக்கையை கிளினிக்கல் டிரையல் கருதி இந்திய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் உலக சுகாதார அமைப்பிற்கு தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழக முதல்வருக்கு கடிதம்

தமிழக முதல்வருக்கு கடிதம்

அதன்மூலம் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற வேண்டும் என ஆயுஷ் கவுன்சில் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பும் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளன. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

மருத்துவர்களின் வாழ்வாதாரம்

மருத்துவர்களின் வாழ்வாதாரம்

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 40 சித்த ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி, நேச்சுரோபதி கல்லூரிகளில் பயிலும் மருத்துவர்களின் வாழ்வாதாரம் உயரும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறோம் என முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் குறிப்பிட்டுள்ளார்.

English summary
GOTO President Selvakumar requested TN CM to recommand WHO to use siddha medicine for covid treatment
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X