இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க!
டெல்லி : ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றாலே ஓட்டுநர் உரிமம் வழங்கும் புதிய விதிமுறைகள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம்.

ஓட்டுநர் உரிமம் அவசியம்
தற்போது எந்த வாகனம் ஓட்டுவதற்கும் பயிற்சி பெறுபவர்கள் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றிருந்தாலும், ஆர்.டி. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ அதிகாரி முன்பு வாகனத்தை ஓட்டிக் காண்பிக்க வேண்டும். மோட்டார் சைக்கிள் என்றால் 8 வடிவில் ஓட்டி காண்பிக்க வேண்டும். அப்போதுதான் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். இதுதான் இப்போதைய நடைமுறை.

புதிய நடைமுறை
இந்த நிலையில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் புதிய நடைமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த நடைமுறையின்படி அரசால் அங்கீகரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களில் வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி பெறுபவர்களுக்கு, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வில் பங்கேற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

8 போட வேண்டாம்
பயிற்சி மையங்கள் உயர்தர பயிற்சி வழங்குவதற்கான பிரத்யேக பாதையை கொண்டிருக்க வேண்டும். தேவையான போக்குவரத்து விதிகள் அனைத்தும் பயிற்சி பெறுபவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த மையங்களில் பயிற்சி பெறுபவர்கள் ஆர்.டி. அலுவலகத்துக்கு வந்து நேரடியாக ஓட்டி கட்ட வேண்டிய அவசியம் இல்லை.

ஜுலை 1 முதல் அமலுக்கு வருகிறது
அடுத்த மாதம் ஜுலை 1-ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரு இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. விதிமுறை மீறல் மற்றும் போதிய திறன் இல்லாமல் ஏற்படும் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications